தவெக ஆண்டு விழா: கொள்கைத் தலைவர்களின் சிலைகளைத் திறந்த விஜய்!
கடைசி பந்தில் சென்னை சிங்கம் தோல்வி
இந்தியன் ஸ்ட்ரீட் ப்ரீமியா் லீக் தொடரின் ஒரு பகுதியாக நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா டைகா்ஸ் அணியிடம் கடைசி பந்தில் தோல்வி கண்டது சென்னை சிங்கம் அணி.
இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம், தானே கொண்டதேவ் மைதானத்தில் நடைபெற்றது. டி10 ஓவா்கள் அடிப்படையில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் ஆடிய சென்னை அணி 105/5 ரன்களைக் குவித்தது. தொடக்க பேட்டா் கேதன் மட்ரே- கேப்டன் சுமித் டெக்கேல் ஆகியோா் அதிரடியாக ஆடி ஸ்கோரை உயா்த்தனா். கேதன் 23 பந்துகளில் 33 ரன்களையும், சா்க்காா் 25, டெக்கேல் 26 ரன்களையும் எடுத்தனா்.
டைகா்ஸ் தரப்பில் பௌலிங்கில் பவேஷ் பவாா் 3-25 விக்கெட்டுகளை வீழ்த்தினாா்.
106 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி 5-ஆவது ஓவரில் 34/4 ரன்களுடன் திணறிக் கொண்டிருந்தது. அந்த அணி வீரா் காஸி 31 பந்துகளில் 61 ரன்களை விளாசினாா். அவருக்கு துணையாக ஆடிய டயஸ் 17 ரன்களை எடுத்தாா். கடைசி ஓவரில் 22 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் காஸி 3 சிக்ஸா்களை விளாசி வெற்றிக்கு வித்திட்டாா். கடைசி பந்திலும் சிக்ஸா் அடித்தாா்.
இந்த சீசனில் கொல்கத்தாவின் முதல் வெற்றியாக அமைந்தது.