செய்திகள் :

“ECR விவகாரத்தில் கைது செய்யப்பட்ட குற்றவாளி அதிமுகவைச் சேர்ந்தவர்" - ஆர்.எஸ்.பாரதி சொல்வதென்ன?

post image
சென்னை ஈசிஆர் விவகாரத்தில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள சந்துரு என்ற நபர் அதிமுகவைச் சேர்ந்தவர் என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்திருக்கிறார்.

சென்னை ஈ.சி.ஆர். சாலையில், காரில் சென்ற பெண்களை திமுக கொடி பொருத்திய காரில் வந்த சிலர், சாலையின் நடுவில் மறித்து, அப்பெண்களை அச்சுறுத்தும் வகையில் நடந்துகொண்ட சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 5 பேரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள சந்துரு என்ற நபர் அதிமுகவைச் சேர்ந்தவர் என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்திருக்கிறார்.

ஆர்.எஸ்.பாரதி
ஆர்.எஸ்.பாரதி

செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய ஆர்.எஸ்.பாரதி, " தினமும் 5 பொய்களை சொல்வதென சத்தியம் செய்து கொண்டு அரசியல் செய்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி. தமிழ்நாட்டில் எங்கு குற்றம் நடந்தாலும், அதனை திமுகவுடன் தொடர்புபடுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் எடப்பாடி பழனிசாமி செயல்பட்டு வருகிறார். அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தை பூதாகரமாக்க முயற்சி செய்தார்கள். ஆனால் அதற்கு காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுத்துவிட்டது. 2 நாட்களுக்கு முன் ஈசிஆரில் நடந்த சம்பவத்தையும் திமுகவுடன் தொடர்புப்படுத்தி பேசி இருக்கிறார்.

திமுக கொடியுடன் சென்றால், குற்றம் செய்வதற்கு லைசென்ஸா என்று கீழ்த்தரமாக பேசி இருக்கிறார். இந்த சம்பவம் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் கைது செய்யப்பட்டுள்ள சந்துரு என்பவர் அதிமுகவைச் சேர்ந்தவர். அந்த வீடியோவில் இருந்த கார் ஒன்று, நீலகிரி மாவட்ட அதிமுக செயலாளரின் சகோதரர் மகனுக்கு சொந்தமானது. அந்த காரினை பயன்படுத்தியவர்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

அதிமுகவினர் செய்யும் குற்றங்களுக்குக்கூட திமுக மீது பழி சுமத்துகிறார். கடந்த ஓராண்டில் மட்டும் அதிமுகவினர் செய்த குற்றங்களின் எண்ணிக்கை ஏராளம். திமுகவின் கொடியை கட்டிக்கொண்டு அதிமுகவினர் குற்றத்தில் ஈடுபடுகிறார்கள்" என்று எடப்பாடி பழனிசாமியை கண்டித்து பேசியிருக்கிறார்.

சென்னை: ஈ.சி.ஆரில் பெண்களை காரில் துரத்திய இளைஞர்களின் பகீர் பின்னணி!

சென்னை கிழக்கு கடற்கரை சாலை கானத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நான்கு பெண்கள், இரண்டு ஆண்கள் என ஆறு பேர் பயணித்த காரை தி.மு.க கொடி கட்டிய கார் ஒன்றும் இன்னொரு காரும் விரட்டியது. அதனால் அத... மேலும் பார்க்க

கும்பகோணம்: கல்லூரி கழிப்பறையில் குழந்தை பெற்ற மாணவி; குப்பை தொட்டியில் வீசியதால் அதிர்ச்சி...

கும்பகோணம், நாச்சியார் கோவில் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவி, கும்பகோணத்தில் உள்ள அரசு கல்லூரி ஒன்றில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கு கர்ப்பிணி பெண்களை போல் வயிறு பெரிதாக இர... மேலும் பார்க்க

சென்னை: மாணவிக்குப் பாலியல் தொல்லை; கட்டாய திருமணம் - காவலர் உட்பட 3 பேர் சிக்கிய பின்னணி!

வடமாநிலத்தைச் சேர்ந்த தம்பதி, குழந்தைகளுடன் ஐஸ்ஹவுஸ் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் குடியிருந்து வருகிறார்கள். இந்த தம்பதியினரின் 14 வயது மகள், சென்னையில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வர... மேலும் பார்க்க

வேலூர்: மாயமான பெண் குழந்தை கிணற்றுக்குள் மிதந்த கொடூரம்; கொலையா? - போலீஸ் தீவிர விசாரணை

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகிலுள்ள தட்டப்பாறை ஏரியின் கீழ்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் தரணி, விவசாயி. இவரின் இரண்டரை வயது பெண் குழந்தை ஜெயப்பிரியா, கடந்த 28-ம் தேதி மாலை வீட்டருகே விளையாடிக்கொண்டிர... மேலும் பார்க்க

பிரியாணிக் கடைக்கு உரிமம் வழங்குவதாகப் பணமோசடி; நீதிமன்ற வாசலில் பாதிக்கப்பட்ட 249 பேர் போராட்டம்

விருதுநகர் மாவட்டத்தில், பிரியாணிக் கடை கிளை அமைப்பதற்கு உரிமம் வழங்குவதாக 4 மாநிலங்களைச் சேர்ந்த 249 பேரிடம் கோடிக்கணக்கான‌ ரூபாய் ஏமாற்றி மோசடி செய்யப்பட்டுள்ளதாகப் புகார் எழுந்தது.இதுதொடர்பாக போலீஸ... மேலும் பார்க்க

ஊட்டி: காரை மறித்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை; மழுப்பிய சார் பதிவாளர்; என்ன நடந்தது?

நீலகிரி மாவட்டம் ஊட்டி எண் 2 இணை சார் பதிவாளர் அலுவலகத்தில் சார் பதிவாளராகப் பணியாற்றி வந்தவர் ஷாஜகான். திருப்பூருக்குப் பணியிட மாறுதல் செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று காலை பொறுப்பு ஏற்பதற்காக ஊட்டி... மேலும் பார்க்க