செய்திகள் :

லக்ஷயா வெற்றி; சிந்து தோல்வி

post image

ஜகார்த்தா: இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் பிரதான வீராங்கனை பி.வி.சிந்து முதல் சுற்றிலேயே தோற்க, லக்ஷயா சென் 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினார்.

ஆடவர் ஒற்றையரில், லக்ஷயா சென் 21-9, 21-14 என்ற கேம்களில், ஜப்பானின் டகுமா ஒபயாஷியை 39 நிமிஷங்களில் வென்றார். எனினும், ஆயுஷ் ஷெட்டி, கிரண் ஜார்ஜ், பிரியன்ஷு ரஜாவத் ஆகியோர் முதல் சுற்றிலேயே தோற்றனர்.

மகளிர் ஒற்றையரில், சிந்து 20-22, 12-21 என, வியத்நாமின் தை லி குயெனிடம் தோல்வியைத் தழுவினார். அதேபோல் அனுபமா உபாத்யாய, தன்மய் ஹேம்நாத், ஆகர்ஷி காஷ்யப், ரக்ஷிதா ஸ்ரீ ஆகியோரும் முதல் சுற்றுடனேயே வெளியேறினர்.

கலப்பு இரட்டையரில், துருவ் கபிலா/தனிஷா கிராஸ்டோ இணை 21-18, 21-14 என்ற கேம்களில், இந்தோனேசியாவின் அட்னன் மெளலானா/இண்டா சாயா ஜமில் கூட்டணியை 36 நிமிஷங்களில் வீழ்த்தி, 2-ஆவது சுற்றுக்கு முன்னேறியது. எனினும், ரோஹன் கபூர்/ருத்விகா ஷிவானி ஜோடி தோற்றது.

இந்திய அணி அறிவிப்பு: இதனிடையே, சீனாவில் பிப்ரவரியில் நடைபெறவுள்ள ஆசிய கலப்பு அணிகள் பாட்மின்டன் சாம்பியன்ஷிப்பில் பங்கேற்கவிருக்கும் இந்திய அணி புதன்கிழமை அறிவிக்கப்பட்டது.

ஆடவர் பிரிவில் லக்ஷயா சென், ஹெச்.எஸ். பிரணாய், சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி, சிராக் ஷெட்டி, துருவ் கபிலா, எம்.ஆர்.அர்ஜுன், கே.சதீஷ்குமார் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். மகளிர் பிரிவில் பி.வி.சிந்து, மாளவிகா பன்சோட், காயத்ரி கோபிசந்த், டிரீசா ஜாலி, அஸ்வினி பொன்னப்பா, தனிஷா கிராஸ்டோ ஆகியோர் இணைந்துள்ளனர்.

மேஷம் - மீனம்: தினப்பலன்கள்!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.Dinapalan - 23.01.2025மேஷம்:இன்று உற்றார்-உறவினர்களும் தங்கள் பங்கிற்கு வீண்பிரச்சினை... மேலும் பார்க்க

அர்ஷ்தீப், வருண் அசத்தல்; அபிஷேக் அதிரடி

கொல்கத்தா: இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட்டில் இந்தியா, 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் புதன்கிழமை வெற்றி பெற்றது. முதலில் இங்கிலாந்து 20 ஓவர்களில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 132 ரன்கள் ... மேலும் பார்க்க

பிரக்ஞானந்தா தனி முன்னிலை

விக் ஆன் ஸீ: நெதர்லாந்தில் நடைபெறும் டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியின் 4-ஆவது சுற்றில் வெற்றி பெற்ற இந்தியாவின் ஆர்.பிரக்ஞானந்தா, தனி முன்னிலை பெற்றார். முன்னதாக இணை முன்னிலையில் இருந்த பிரக்ஞானந்... மேலும் பார்க்க

அரையிறுதியில் சின்னா், ஷெல்டன்

மெல்போா்ன்: கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியான ஆஸ்திரேலிய ஓபனில், நடப்பு சாம்பியனான இத்தாலியின் யானிக் சின்னா், அமெரிக்காவின் பென் ஷெல்டன் ஆகியோா் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனா். ஆடவா் ஒற்றையா் காலிறுத... மேலும் பார்க்க

முதல் டி20 கிரிக்கெட்டில் இந்தியா வெற்றி

கொல்கத்தா: இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட்டில் இந்தியா, 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் புதன்கிழமை வெற்றி பெற்றது. முதலில் இங்கிலாந்து 20 ஓவா்களில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 132 ரன்கள் ... மேலும் பார்க்க

விளையாட்டு வீரா்களுக்கான தோ்வுப் போட்டிகள்: பிப்.1-இல் தொடக்கம்

சென்னை: இந்திய விளையாட்டு ஆணையம் சாா்பில், 12 முதல் 18 வயதுக்குட்பட்டவா்கள் பிரிவில் தடகளம், கால்பந்து மற்றும் கபடி வீரா்களுக்கான தோ்வுப் போட்டிகள் சென்னையில் நடைபெறவுள்ளன.இது குறித்து இந்திய விளையாட... மேலும் பார்க்க