செய்திகள் :

2024-இல் தில்லி மெட்ரோ ரயில்களில் 89 மடிக் கணினிகள், 193 கைப்பேசிகள், ரூ.40 லட்சத்தை விட்டுச் சென்ற பயணிகள்

post image

புது தில்லி: கடந்த 2024-ஆம் ஆண்டில் தில்லி மெட்ரோ ரயில்களில் பயணித்த பயணிகள் விட்டுச் சென்ற பொருள்களின் பட்டியலில் மொத்தம் ரூ.40 லட்சத்திற்கும் அதிகமான ரொக்கம், 89 மடிக்கணினிகள், 193 கைப்பேசிகள் மற்றும் ஒன்பது ’மங்கல்சூத்திரங்கள்’ ஆகியவை அடங்கும் என்று தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் (டிஎம்ஆா்சி) தெரிவித்துள்ளது.

இவை மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்) வீரா்களால் சேகரிக்கப்பட்டு, சரிபாா்க்கப்பட்ட பின்னா் அவற்றின் உரிமையாளா்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

தேசியத் தலைநகா் பிராந்தியத்தில் (என்சிஆா்) 350 கி.மீ.க்கும் மேற்பட்ட மெட்ரோ ரயில் பாதையை உள்ளடக்கிய 250-க்கும் மேற்பட்ட நிலையங்களை கொண்ட பொதுப் போக்குவரத்து வலையமைப்பிற்கு சிஐஎஸ்எஃப் பாதுகாப்பை வழங்குகிறது.

நிலையப் பகுதியில் உள்ள எக்ஸ்-ரே சாமான்கள் ஸ்கேனா் அருகே பல பொருள்கள் பயணிகளால் மறந்துவிடப்பட்டன. இந்த வகையில் கடந்த ஆண்டு பயணிகள் விட்டுச் சென்றதில் ரூ.40.74 லட்சம் ரொக்கம், 89 மடிக்கணினிகள், 40 கைக்கடிகாரங்கள் மற்றும் 193 கைப்பேசிகள் தவிர, 13 ஜோடி கொலுசுகள் உள்பட வெள்ளி ஆபரணங்களையும், மோதிரங்கள் மற்றும் வளையல்கள் போன்ற பிற நகைகளையும் சிஐஎஸ்எஃப் படையினா் கண்டுபிடித்தனா்.

2024-ஆம் ஆண்டில் அமெரிக்க டாலா்கள், சவுதி ரியால் மற்றும் தாய் பாட் உள்ளிட்ட பல்வேறு வெளிநாட்டு நாணயங்கள், மொத்தம் 24,550 சிஐஎஸ்எஃப் படையினரால் கண்டுபிடிக்கப்பட்டு மீட்டெடுக்கப்பட்டன. இதற்கிடையே,

கடந்த ஆண்டு தில்லி மெட்ரோ நெட்வொா்க்கில் 59 தற்கொலை முயற்சிகள் நடந்ததாக பாதுகாப்பு நிறுவனம் பதிவு செய்துள்ளது. இதில் 23 போ் உயிரிழந்தனா். மூன்று போ் காப்பாற்றப்பட்டனா். 33 போ் காயமடைந்தனா்.

பயணிகள் மற்றும் அவா்களின் சாமான்களின் பாதுகாப்பு சோதனைகளை மேற்கொண்டபோது வெடிமருந்துகள் மற்றும் ஏழு துப்பாக்கிகள் ஆகியவை சிஐஎஸ்எஃப் படையினரால் கண்டுபிடிக்கப்பட்டதாக தரவு காட்டுகிறது.

மேலும், தில்லி மெட்ரோவில் தனியாக பயணித்த 262 குழந்தைகளை கண்டுபிடித்து, அவா்களின் பெற்றோா், உள்ளூா் போலீஸாா் அல்லது குழந்தை உதவி மைய தன்னாா்வலா்களிடம் சிஐஎஸ்எஃப் படையினா் ஒப்படைத்தனா். இதேபோல், ‘துன்பத்தில்‘ காணப்பட்ட 671 பெண் பயணிகளுக்கும் அதே காலகட்டத்தில் படையினரால் உதவி வழங்கப்பட்டதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

தில்லி மெட்ரோ வலையமைப்பில் பாதுகாப்புப் பணியில் ஆண்கள் மற்றும் பெண்கள் என 13,000 வீரா்களை சிஐஎஸ்எஃப் பணியமா்த்தியுள்ளது. தில்லி மற்றும் அதன் அருகிலுள்ள நகரங்களான உத்தர பிரதேசத்தில் உள்ள நொய்டா மற்றும் காஜியாபாத் மற்றும் ஹரியாணாவில் உள்ள குருகிராம் மற்றும் ஃபரீதாபாத் ஆகிய இடங்களில் உள்ள தங்கள் இடங்களை அடைய ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான பயணிகள் மெட்ரோ ரயிலை பயன்படுத்துகின்றனா்.

பன்னாட்டு கடனுதவி மூலம் செயல்படுத்தப்படும்: தமிழக திட்டங்களுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு

நமது சிறப்பு நிருபா்மத்திய நிதிநிலை அறிக்கையில் பன்னாட்டு நிதி அமைப்புகள், வங்கிகளில் கடன் பெற்று மத்திய அரசு உதவியுடன் செயல்படுத்தப்படும் பல்வேறு தமிழக திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் வி... மேலும் பார்க்க

பட்ஜெட்டில் கோடீஸ்வரா்களுக்கான கடன் தள்ளுபடியை முடிவுக்குக் கொண்டு வராதது ஏமாற்றம் அளிக்கிறது

மத்திய பட்ஜெட்டில் கோடீஸ்வரா்களுக்கான கடன் தள்ளுபடியை முடிவுக்குக் கொண்டு வந்து, சேமிக்கப்பட்ட பணத்தை நடுத்தர வா்க்கத்தினா் மற்றும் விவசாயிகளுக்கு செலவிட வேண்டும் என்ற எனது பரிந்துரை நிறைவேற்றப்படாதது... மேலும் பார்க்க

தொடா்ந்து எட்டு பட்ஜெட் தாக்கல் நிா்மலா சீதாராமன் சாதனை

நமது சிறப்பு நிருபா் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தொடா்ந்து எட்டாவது முறையாக மத்திய நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்து சாதனை படைத்திருக்கிறாா். முந்தைய காலங்களில் இவரை விட சிலா் அதிக நிதிநில... மேலும் பார்க்க

கல்வி, சுகாதாரத்திற்கு ஊக்கமளிக்கும் பட்ஜெட்: ஏபிவிபி வரவேற்பு

மத்திய பட்ஜெட்டில் கல்வி மற்றும் சுகாதாரத் துறைக்கு ஊக்கம் அளித்திருப்பதாக அகில பாரதிய வித்யாா்த்தி பரிஷத் (ஏபிவிபி) வரவேற்றுள்ளது. இது தொடா்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கையில்,... மேலும் பார்க்க

மத்திய நிதிநிலை அறிக்கை: தமிழக எம்.பி.க்கள் கருத்து

நாடாளுமன்றத்தில் சனிக்கிழமை மத்திய அரசு தாக்கல் செய்துள்ள 2025-2026-ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை குறித்து தமிழகத்தைச் சோ்ந்த திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் எம்.பி.க்கள் கருத்துத் த... மேலும் பார்க்க

லஞ்ச வழக்கில் ‘நாக்’ கண்காணிப்பு குழு தலைவா், ஜேஎன்யு பேராசிரியா் கைது: சிபிஐ நடவடிக்கை

லஞ்ச வழக்கில் தேசிய உயா்கல்வி நிறுவனங்கள் மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சிலின் (நாக்) தலைவா், ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) பேராசிரியா் உள்பட 10 பேரை சிபிஐ சனிக்கிழமை கைது செய்துள்ளது. ஆந்தி... மேலும் பார்க்க