மதுவிருந்து, இசைநிகழ்ச்சி இல்லாமல் திருமணம்: பஞ்சாப் கிராமத்தில் ரூ.21,000 சன்மா...
ஒரே நாளில் வெளியாகும் குட் பேட் அக்லி, இட்லி கடை!
நடிகர்கள் அஜித் மற்றும் தனுஷ் ஆகியோரின் படங்கள் ஒரே நாளில் திரைக்கு வருகின்றன.
நடிகர் தனுஷ் இயக்கி, நடித்து வரும் திரைப்படமான இட்லி கடை இந்தாண்டு ஏப்ரல் 10 ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
பொங்கல் வெளியீடாக வரவிருந்த அஜித்தின் விடாமுயற்சி படத்தின் வெளியீட்டில் மாற்றம் ஏற்பட்டதால், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்த குட் பேட் அக்லி திரைப்படம் ஏப். 10 ஆம் தேதி திரைக்கு வருவதாக அறிவித்துள்ளனர்.
இந்த இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியாவதால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு கூடியுள்ளது.
இதையும் படிக்க: பாகுபலி - 2 வசூலை முறியடித்த புஷ்பா - 2!
அதேநேரம், நடிகர் ரஜினிகாந்த்தின் கூலி மற்றும் சூர்யா நடித்த ரெட்ரோ ஆகிய படங்களும் கோடை வெளியீட்டையே குறிவைத்திருந்த நிலையில், இப்படங்கள் மே மாதம் வெளியாகலாம் எனத் தெரிகிறது.
நடிகர் கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் உருவான தக் லைஃப் படம் ஜூன் வெளியீடாக திரைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.