செய்திகள் :

பல்லாவரம் - திரிசூலம் இடையே நடுவழியில் நிறுத்தப்பட்ட மின்சார ரயில்

post image

பல்லாவரம் - திரிசூலம் இடையே மின்சார ரயில் 20 நிமிடமாக நிறுத்தப்பட்டதால் அதிலிருந்த பயணிகள் இறங்கி தண்டவாளத்தில் நடந்து சென்றனர்.

தாம்பரம்- சென்னை கடற்கரை இடையேயான புறநகர் மின்சார ரயில் சேவை இன்று(ஜன.5) காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.

தாம்பரம் ரயில் நிலையத்தில் நடைமேம்பால பணிகள் நடைபெற உள்ளதால் ரத்து என தெற்கு ரயில்வே விளக்கமளித்துள்ளது.

இந்த நேரத்தில் பல்லாவரம்-கடற்கரை, செங்கல்பட்டு-கூடுவாஞ்சேரி இடையே பயணிகள் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஞானசேகரனிடம் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை!

மின்சார ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டதால் தாம்பரம் பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.

இதனிடையே பல்லாவரம் - திரிசூலம் இடையே மின்சார ரயில் 20 நிமிடமாக நிறுத்தப்பட்டதால் அதிலிருந்த பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

பின்னர் அவர்களாவே ரயிலிருந்து இறங்கி தண்டவாளத்தில் நடந்து சென்றனர்.

மேட்டூர் அணையிலிருந்து நீர் திறப்பு குறைப்பு!

சேலம்: மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 10,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 117.87 அடியில் இருந்து 117.21 ... மேலும் பார்க்க

விராலிமலையில் 5 ஆயிரம் பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை!

விராலிமலை: விராலிமலை அம்மன் கோயிலில் மார்கழி மாதத்தில் வரும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் திருவிளக்கு பூஜையின் 7-வது பூஜை இன்று அதிகாலை கோயில் வளாகத்தில் நடைபெற்றது. இதில் 5 ஆயிரம் பெண்கள் ... மேலும் பார்க்க

மாவட்டங்கள் - வயது வாரியாக வாக்காளா்கள் எண்ணிக்கை விவரம்

தமிழகத்தில் மாவட்ட வாரியாக வாக்காளா்கள் எண்ணிக்கை விவரங்களை தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ளாா்.இது குறித்து, அவா் திங்கள்கிழமை வெளியிட்ட பட்டியல்:1. திருவள்ளூா் 35,31,0452. சென... மேலும் பார்க்க

இந்தியாவின் மருத்துவத் தலைநகராக தமிழகம்!

சென்னை: இந்தியாவின் மருத்துவத் தலைநகராக தமிழகம் திகழ்ந்து வருவதாக பேரவைத் தலைவா் படித்தளித்த ஆளுநா் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.உரை விவரம்:மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையில் தமிழகம், இந்... மேலும் பார்க்க

தமிழகத்தில் அடுத்த 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை: வங்கக்கடலில் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடலோர மாவட்டங்களில் அடுத்த 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.அதேநேரத்தில், உள்மாவட்டங்களில் வட வானிலையே நிலவும் என சென்னை வானி... மேலும் பார்க்க

சொத்துக் குவிப்பு வழக்கு: அமைச்சா் துரைமுருகனுக்கு எதிரான வழக்கில் தீா்ப்பு ஒத்திவைப்பு

சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சா் துரைமுருகன் உள்ளிட்டோா் விடுவிக்கப்பட்டதை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்ட மறுஆய்வு மனு மீதான தீா்ப்பை உயா்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்... மேலும் பார்க்க