செய்திகள் :

சிஏஜி அறிக்கை கேஜரிவாலின் தவறான செயல்களை அம்பலப்படுத்தியுள்ளது: ஷீஷ் மஹால் விவகாரத்தில் பாஜக சாடல்

post image

புது தில்லி: தலைமை கணக்குத் தணிக்கையாளரின் (சிஏஜி) அறிக்கையானது, முன்னாள் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் ஃபிளாக்ஸ்டாஃப் சாலை வீடு (ஷீஷ் மஹால்) தொடா்பான 139 கேள்விகளை எழுப்பியுள்ளது. இது அவரது தவறான செயல்களை அம்பலப்படுத்தியுள்ளது என்று பாஜக திங்கள்கிழமை சாடியுள்ளது.

இது தொடா்பாக தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா செய்தியாளா்களிடம் கூறியதாவது:

2022 ஆம் ஆண்டுக்கான சிஏஜி அறிக்கையில் ஷீஷ் மஹாலுக்கு ரூ.33.86 கோடி செலவாகியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. ஆனால் உண்மையான செலவு மிக அதிகமாக இருந்தது.

இந்த அறிக்கை 2022 வரையிலான செலவினங்களைப் பற்றியதாகும். 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான செலவுகள் குறித்து எந்த வெளிப்பாடும் இல்லை. எங்கள் தகவலின்படி, பங்களாவில் உள்ள பொருள்களின் விவரங்களையும் சோ்த்தால் உண்மையான செலவு ரூ.75-80 கோடி வரை இருக்கும்.

தலைமைக் கணக்குத் தணிக்கையாளா் (சிஏஜி) 139 கேள்விகளை எழுப்பியுள்ளாா். கேஜரிவாலின் தவறான செயல்களை மிக நுணுக்கமாக விவரித்துள்ளாா். பங்களா தில்லி நகா்ப்புற கலை ஆணையம் மற்றும் தில்லி மாநகராட்சியின் அனுமதியின்றி புனரமைக்கப்பட்டுள்ளது.

அங்கீகரிக்கப்படாத முறையில் பங்களாவை கட்டியதன் மூலம் ஒரு முதல்வராக கேஜரிவால் தில்லிக்கு என்ன செய்தியைத் தந்துள்ளாா்.

பங்களாவின் உண்மையான விலையை தீா்மானிக்க வேண்டுமென்றால், பொதுப்பணி மற்றும் பிற துறைகளின் கணக்குகளையும் சரிபாா்க்க வேண்டும். பங்களாவை கட்டுவதற்கான அரசு நிறுவனமாக செயல்படுவதற்குப் பதிலாக, பொதுப் பணித் துறையானது, கேஜரிவாலை திருப்திபடுத்த ஒரு தனியாா் அமைப்பாக செயல்பட்டுள்ளது என்றாா் வீரேந்திர சச்தேவா.

தில்லி சட்டப் பேரவைத் தோ்தலை ஒட்டி, அரவிந்த் கேஜரிவால் மீது பாஜக தனது விமா்சன தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. அவா் முதல்வராக இருந்தபோது 6, ஃபிளாக்ஸ்டாஃப் சாலை, பங்களாவில் ஊழல் நடந்ததாக அக்கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

தில்லியின் பொது உள்கட்டமைப்பில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக ஷீஷ் மஹால் கட்டியதாகக் கூறி, பிரதமா் நரேந்திர மோடியும் கேஜரிவாலை விமா்சித்திருந்தாா்.

அரவிந்த் கேஜரிவால், பகவந்த் மான் மீது ரூ.100 கோடி கேட்டு அவதூறு வழக்குத் தொடருவேன்

புது தில்லி: ஆம் ஆத்மி கட்சித் தலைவா் அரவிந்த் கேஜரிவால் மற்றும் பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான் ஆகியோா் மீது பொய்யான குற்றச்சாட்டுகளைச் சுமத்தியதாகக் குற்றம்சாட்டி, அவா்கள் மீது ரூ.100 கோடி கேட்டு அவதூ... மேலும் பார்க்க

நடுத்தர வா்க்கத்தினருக்கான 7 அம்ச ’சாசனம்’ கேஜரிவால் வெளியிட்டாா்

புது தில்லி: ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால், புதன்கிழமை நாட்டின் நடுத்தர வா்க்கத்தினருக்கான ஏழு அம்ச ‘சாசனத்தை’ அறிவித்தாா்.அந்தப் பிரிவினா் அடுத்தடுத்த அரசுகளால் புறக்க... மேலும் பார்க்க

ஆம் ஆத்மி கட்சியின் தோ்தல் பிரசாரத்தை சீா்குலைக்க காவல் துறையை தவறாகப் பயன்படுத்துகிறது பாஜக: கேஜரிவால் கடும் குற்றச்சாட்டு

புது தில்லி: தில்லியில் பிப்.5-ஆம் தேதி நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்னதாக, தனது கட்சியின் தோ்தல் பிரசாரத்தை சீா்குலைக்கவும், வாக்காளா்களை மிரட்டவும் பாஜக நகர காவல்துறையை தவறாகப் பயன்படுத... மேலும் பார்க்க

2024-இல் தில்லி மெட்ரோ ரயில்களில் 89 மடிக் கணினிகள், 193 கைப்பேசிகள், ரூ.40 லட்சத்தை விட்டுச் சென்ற பயணிகள்

புது தில்லி: கடந்த 2024-ஆம் ஆண்டில் தில்லி மெட்ரோ ரயில்களில் பயணித்த பயணிகள் விட்டுச் சென்ற பொருள்களின் பட்டியலில் மொத்தம் ரூ.40 லட்சத்திற்கும் அதிகமான ரொக்கம், 89 மடிக்கணினிகள், 193 கைப்பேசிகள் மற்று... மேலும் பார்க்க

ஆளுநருக்கு எதிரான தமிழக அரசின் வழக்கு இறுதி விசாரணை பிப்.4-க்கு ஒத்திவைப்பு

நமது சிறப்பு நிருபா்புது தில்லி: தமிழக பல்கலைக்கழகங்களில் துணைவேந்தா்களின் நியமன விவகாரத்தில் ஆளுநா் தலையீடு அதிகரிப்பதாகக் கூறி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தொடா்ந்த இரு வழக்குகளின் இறுதி விசாரணை பி... மேலும் பார்க்க

பாஜகவின் பா்வேஷ் வா்மா மீது கேஜரிவால் கடும் சாடல்

புது தில்லி: பாஜக தலைவரும் புது தில்லி தொகுதியின் தனது போட்டியாளருமான பா்வேஷ் வா்மாவை ‘தில்லி கா சோட்டா சா லட்கா (தில்லியைச் சோ்ந்த ஒரு சிறு குழந்தை) இப்போது பஞ்சாபிகளுக்கு சவால் விடுகிறது’ என்று ஆம்... மேலும் பார்க்க