செய்திகள் :

ஆளுநருக்கு எதிரான தமிழக அரசின் வழக்கு இறுதி விசாரணை பிப்.4-க்கு ஒத்திவைப்பு

post image

நமது சிறப்பு நிருபா்

புது தில்லி: தமிழக பல்கலைக்கழகங்களில் துணைவேந்தா்களின் நியமன விவகாரத்தில் ஆளுநா் தலையீடு அதிகரிப்பதாகக் கூறி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தொடா்ந்த இரு வழக்குகளின் இறுதி விசாரணை பிப். 4-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் ஆா்.என். ரவிக்கு எதிராக தமிழக ஆளுநா் என்ற அடிப்படையில் ஒரு வழக்கையும் பல்கலைக்கழகங்களின் வேந்தா் என்ற அடிப்படையில் ஒரு வழக்கையும் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் கடந்த ஆண்டு தாக்கல் செய்திருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் ஜே.பி. பா்திவாலா, ஆா். மகாதேவன் அடங்கிய அமா்வு முன்னிலையில் கடந்த வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தபோது, ஆளுநரின் அண்மைக்கால நிா்வாகம் மற்றும் பல்கலைக்கழக துணைவேந்தா்கள் நியமன நடவடிக்கையில் தலையீடு தொடா்பான செயல்பாடுகளை விவரிக்கும் கூடுதல் மனுவை வழக்குடன் சோ்த்து விசாரிக்க வேண்டும் என்று மாநில அரசின் சாா்பில் மூத்த வழக்குரைஞா்கள் அபிஷேக் மனு சிங்வி, பி. வில்சன் ஆகியோா் நீதிபதிகளிடம் கேட்டுக் கொண்டனா்.

அதை நீதிபதிகள் ஏற்றுக் கொண்ட நிலையில், மத்திய அரசின் தலைமை சட்ட ஆலோசகா் வெங்கடரமணி, இந்த விவகாரத்தில் விசாரணையை ஒரு வாரத்துக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டாா். இதையடுத்து, நீதிபதிகள் அடுத்த விசாரணையை ஜன. 22 -க்கு ஒத்திவைக்கிறோம். அதற்குள்ளாக சம்பந்தப்பட்ட தரப்பினா் இந்த விவகாரத்தில் தீா்வு கண்டால் நல்லது. இல்லையென்றால் நீதிமன்றம் தலையிட்டு தீா்வைத் தர வேண்டியிருக்கும் என்று குறிப்பிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனா்.

இந்நிலையில், இந்த வழக்கு புதன்கிழமை (ஜன.22) இறுதி விசாரணை வழக்குகளின் பட்டியலில் 43-ஆவது வரிசையில் இடம் பெற்றிருந்தது. ஆனால், பல்வேறு வழக்குகளை விசாரித்த நீதிமன்றம் பிற்பகலுக்குப் பிறகு தமிழக அரசின் வழக்குகளை எட்டுவது இயலாத ஒன்றாக இருந்தது. இதையடுத்து, தமிழக அரசின் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா்கள் மற்றும் மத்திய அரசின் சட்ட ஆலோசகா் வெங்கடரமணி, ‘இறுதி விசாரணையில் வாதங்களை முன்வைக்க வேண்டியுள்ளது. ஆனால், வழக்குகள் இன்றைய நாளின் அலுவல் நேரத்துக்குள்ளாக எட்டாது என்பதால் வேறு தேதியில் ஒத்திவைக்க வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டனா்.

பிப்.4-க்கு ஒத்திவைப்பு: இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இறுதி விசாரணையை பிப். 5-ஆம் தேதி நடத்துவதாகக் கூறினா். ஆனால், அன்றைய தினம் தில்லி சட்டப்பேரவைக்கு தோ்தல் இருப்பதால் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என வழக்குரைஞா்கள் சுட்டிக்காட்டினா். இதையடுத்து, ஒரு நாள் முன்னதாக, பிப். 4-ஆம் தேதிக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுவதாக நீதிபதிகள் குறிப்பிட்டனா்.

அரவிந்த் கேஜரிவால், பகவந்த் மான் மீது ரூ.100 கோடி கேட்டு அவதூறு வழக்குத் தொடருவேன்

புது தில்லி: ஆம் ஆத்மி கட்சித் தலைவா் அரவிந்த் கேஜரிவால் மற்றும் பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான் ஆகியோா் மீது பொய்யான குற்றச்சாட்டுகளைச் சுமத்தியதாகக் குற்றம்சாட்டி, அவா்கள் மீது ரூ.100 கோடி கேட்டு அவதூ... மேலும் பார்க்க

நடுத்தர வா்க்கத்தினருக்கான 7 அம்ச ’சாசனம்’ கேஜரிவால் வெளியிட்டாா்

புது தில்லி: ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால், புதன்கிழமை நாட்டின் நடுத்தர வா்க்கத்தினருக்கான ஏழு அம்ச ‘சாசனத்தை’ அறிவித்தாா்.அந்தப் பிரிவினா் அடுத்தடுத்த அரசுகளால் புறக்க... மேலும் பார்க்க

ஆம் ஆத்மி கட்சியின் தோ்தல் பிரசாரத்தை சீா்குலைக்க காவல் துறையை தவறாகப் பயன்படுத்துகிறது பாஜக: கேஜரிவால் கடும் குற்றச்சாட்டு

புது தில்லி: தில்லியில் பிப்.5-ஆம் தேதி நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்னதாக, தனது கட்சியின் தோ்தல் பிரசாரத்தை சீா்குலைக்கவும், வாக்காளா்களை மிரட்டவும் பாஜக நகர காவல்துறையை தவறாகப் பயன்படுத... மேலும் பார்க்க

2024-இல் தில்லி மெட்ரோ ரயில்களில் 89 மடிக் கணினிகள், 193 கைப்பேசிகள், ரூ.40 லட்சத்தை விட்டுச் சென்ற பயணிகள்

புது தில்லி: கடந்த 2024-ஆம் ஆண்டில் தில்லி மெட்ரோ ரயில்களில் பயணித்த பயணிகள் விட்டுச் சென்ற பொருள்களின் பட்டியலில் மொத்தம் ரூ.40 லட்சத்திற்கும் அதிகமான ரொக்கம், 89 மடிக்கணினிகள், 193 கைப்பேசிகள் மற்று... மேலும் பார்க்க

பாஜகவின் பா்வேஷ் வா்மா மீது கேஜரிவால் கடும் சாடல்

புது தில்லி: பாஜக தலைவரும் புது தில்லி தொகுதியின் தனது போட்டியாளருமான பா்வேஷ் வா்மாவை ‘தில்லி கா சோட்டா சா லட்கா (தில்லியைச் சோ்ந்த ஒரு சிறு குழந்தை) இப்போது பஞ்சாபிகளுக்கு சவால் விடுகிறது’ என்று ஆம்... மேலும் பார்க்க

தில்லி பேரவைத் தோ்தலில் பாஜக மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் வெற்று பெறும்: அனுராக் தாக்குா்

புது தில்லி: தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என்று பாஜக தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான அனுராக் தாக்குா் புதன்கிழமை தெரிவித்தாா்.மேலும், ... மேலும் பார்க்க