செய்திகள் :

71 பேர்; நூற்றுக்கணக்கான உணவு வகைகள் - கமகமக்கும் திருச்சி அவள் விகடன் சமையல் சூப்பர் ஸ்டார் போட்டி!

post image

மலைக்கோட்டை மாநகரமான திருச்சியில் அவள் விகடன் சார்பில் நடத்தப்படும் சமையல் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சி விமர்சையாக தொடங்கி நடைப்பெற்று வருகிறது. மூங்கில் அரிசி கிச்சடி, பூண்டு அல்வா, சங்குப்பூ பிரியாணி, ஆவாரம்பூ பிஸ்கட், செம்பருத்தி பர்ஃபி, உளுந்தஞ்சோறு, பனங்கிழங்கு கார உருண்டை, கம்மஞ்சோறு என்று நாவுக்கு அறுசுவையையும், உடலுக்கு நலனையும் சேர்க்கும் கமகமக்கும் கைப்பக்குவத்தில் செய்த பலவகை உணவுகளை காட்சிப்படுத்தி, அசத்தியிருக்கிறார்கள் போட்டியில் கலந்துகொண்ட போட்டியாளர்கள்.

நிகழ்வை தொடங்கி வைக்கும் தீனா

திருச்சி பால்பண்ணையில் இருந்து செல்லும் மார்க்கெட் சாலையில் அமைந்துள்ள பத்மாவதி ஹோட்டலில் அவள் விகடன் சார்பில் நடத்தப்படும் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கி நடந்து வருகிறது. 'எங்கள் கைப்பக்குவத்துக்கு ஈடு இணை ஏது?’ என்று ஏராளமான பெண்களும், ‘ நாங்கள் மட்டும் சளைத்தவர்களா என்ன?’ என்று ஆரோக்கிய போட்டியோடு களத்தில் குதித்த ஆண்களும், ‘நாங்கள் மட்டும் தக்காளி தொக்கா... நாங்களும் போட்டியில் இருக்கிறோம் அங்கிள், ஆண்டிஸ், பாட்டீஸ்’ என்றபடி தலா இரண்டு சிறுவர், சிறுமிகளும் வகைவகையான உணவுகளை டிஸ்பிளே செய்திருந்தனர். முன்னதாக, இந்த நிகழ்வை செஃப் தீனா, திருச்சி லலிதா ஜூவல்லரி கிளை மேலாளர் நாராயணசாமி, நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த மூன்று பெண் போட்டியாளர்கள் உள்ளிட்டோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.

அதனைத் தொடர்ந்து, போட்டியாளர்கள் முன் பேசிய செஃப் தீனா,

“உங்கள் சமையல் திறமை உங்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி போய்விடக் கூடாது. அதனை, வெளியுலகத்திற்கு தெரியப்படுத்தவே இந்த போட்டி. நேற்று தஞ்சையில் நடைப்பெற்ற போட்டியில், ’மதுரை ஜிகர்தண்டா போல், தஞ்சை ஜிகர்தண்டா' என்று ஒன்றை ஒரு போட்டியாளர் செய்து அசத்தியிருந்தார்.

நிகழ்வில் பேசும் தீனா

நீங்கள் செய்து கொண்டுவந்துள்ள உணவை முதலில் கண்ணுக்கு விருந்தளிக்கும் வகையில் அழகாக டிஸ்ப்ளே செய்யுங்கள். அதன் பிறகு, அதன் மணம் நாசியை கவர்ந்து, கடைசியாக நாவுக்கு சுவைகூட்டும் விதமாக உங்கள் உணவுகள் இருக்க வேண்டும். அனைவருக்கும் வாழ்த்துகள்’ என்று கூறி, உற்சாகப்படுத்தினார்.

இந்த போட்டியில், திருச்சி, புதுக்கோட்டை, கோவை, ஈரோடு, பெரம்பலூர், கரூர், தஞ்சாவூர், காரைக்குடி, காரைக்கால் என்று பல்வேறு மாவட்டங்களில் இருந்து போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் போட்டியாளர்கள் தாங்கள் சமைத்துக் கொண்டுவந்திருந்த உணவை காட்சிப்படுத்தினர். இதில், துவரங்குறிச்சியைச் சேர்ந்த கனிஷா பேகம் என்பவர் 11 டிஷ்களை செய்து கொண்டு வந்து காட்சிப்படுத்தினார்.

உனவை சுவைக்கும் தீனா

எல்லா போட்டியாளர்களும் பார்வைக்கு வைத்திருந்த உணவுகளை செஃப் தீனா சுவைத்துப் பார்த்து வருகிறார். ராகி புட்டு, மரவள்ளிக்கிழங்கு வடை, பிரண்டை குழம்பு, புதினா ஜூஸ், உளுந்தங்களி என்று நூற்றுக்கும் மேற்பட்ட விதவிதமான டிஷ்களை டிஸ்ப்ளே செய்து, போட்டியாளர்கள் அசத்தியிருப்பதால், கோலாகலமாக நடந்து வருகிறது இந்த சமையல் போட்டி நிகழ்ச்சி.

திருச்சி: `7 வயது சிறுவன் டு 80 வயது பாட்டி..!’ - களைகட்டிய அவள் விகடன் சமையல் சூப்பர் ஸ்டார்

மலைக்கோட்டை மாநகரமான திருச்சியில் அவள் விகடன் சார்பில் நடத்தப்படும் `சமையல் சூப்பர் ஸ்டார்’ நிகழ்ச்சி விமர்சையாக தொடங்கி நடைப்பெற்று முடிந்திருக்கிறது. ராகி புட்டு, சிகப்பு அரிசி பாயசம், பொரிமாவு ஸ்வீ... மேலும் பார்க்க

`ஆரோக்கியத்தின் ஆரம்பப்புள்ளி உணவு' - சமையல் சூப்பர் ஸ்டார் போட்டியில் 4 பேர் ஃபைனலுக்கு தேர்வு!

தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள பாரத் கல்லூரியில் அவள் விகடன் சார்பில் சமையல் சூப்பர் ஸ்டார் போட்டிக்கான நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்களுடன், சமையலில் நாங்களும் சளைத்தவர்கள் இல்... மேலும் பார்க்க

Swiggy 2024: 8 கோடி பிரியாணி பார்சல், மிட் நைட்டில் சிக்கன் பர்கர் - ஸ்விக்கியில் நடந்த உணவு வேட்டை

நம் நாட்டு மக்கள் என்னென்ன உணவுகளை ஆசையாக ஆர்டர் செய்துள்ளனர் என்பதை வெளிப்படுத்தும் விதமாக இந்த ஆண்டின் தரவுகளை வெளியிட்டுள்ளது Swiggy நிறுவனம். ஃபுட் டெலிவரி நாம் உணவகங்களுக்கு சென்று க்யூவில் நிற்க... மேலும் பார்க்க

மதுரை: சமையல் சூப்பர் ஸ்டார் கோலாகலம்; மூன்று இடங்களை பிடித்த நளன் பேத்திகள்!

வாசகிகளை பலவகையான நிகழ்ச்சிகளில் பங்கேற்க வைத்து அவர்களின் திறமைகளை வெளிக்கொண்டுவர உற்சாகப்படுத்தும் அவள் விகடன், சக்தி மசாலாவுடன் இணைந்து சமையல் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியை தமிழகமெங்கும் நடத்தி வருகிற... மேலும் பார்க்க