செய்திகள் :

`ஆரோக்கியத்தின் ஆரம்பப்புள்ளி உணவு' - சமையல் சூப்பர் ஸ்டார் போட்டியில் 4 பேர் ஃபைனலுக்கு தேர்வு!

post image

தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள பாரத் கல்லூரியில் அவள் விகடன் சார்பில் சமையல் சூப்பர் ஸ்டார் போட்டிக்கான நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்களுடன், சமையலில் நாங்களும் சளைத்தவர்கள் இல்லையென ஆண்களும் போட்டியில் பங்கெடுத்தனர். இதில் செஃப் தீனா, பாரத் கல்வி குழுமத்தின் சேர்மன் புனிதா கணேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டதுடன் குத்து விளக்கேற்றி போட்டியை தொடங்கி வைத்தனர்.

உணவு

இதில் பேசிய புனிதா கணேசன், ``சோழநாட்டின் உணவு சுவையாக இருப்பதற்கும், மணப்பதற்கும் காவிரி தண்ணீர் முக்கிய காரணம். விருந்தோம்பலுக்கு பெயர் பெற்ற சோழ நாட்டில், தென் தமிழ்நாட்டில் கேட்டரிங்குக்காக தொடங்கப்பட்ட எங்களுடைய முதல் கல்லூரியில் அவள் சமையல் சூப்பர் ஸ்டார் போட்டி நடப்பதில் பெருமிதம்" என்றார். இதைதொடர்ந்து பேசிய செஃப் தீனா, ``நாம் சமைக்கின்ற உணவை எப்போதும் வேஸ்ட் செய்யக் கூடாது" என்ற கோரிக்கையை முன் வைத்தார்.

இதில் அரியலூர், நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட பல மாவட்டங்களைச் சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டனர். முள்முருங்கை பனியாரம், முருங்கை கீரை சட்னி, ஹார்டீன் இட்லி, பீட்ரூட் தோசை, நொதல் அல்வா, சுரைக்காய் நண்டு பிரட்டல், தேங்காய் பால் சாதம், முருங்கை கீரை இறால், நெல்லிகாய் சாதம், வத்தக்குழம்பு சாதம் என வகை வகையான சுவையான உணவுகளைச் செய்து எடுத்து வந்திருந்தனர். தாங்கள் கொண்டு வந்த டிஷ்ஷை தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் டிஸ்ப்ளே செய்திருந்தனர் போட்டியாளர்கள். செஃப் தீனா, அந்த உணவுகளை டேஸ்ட் செய்தார்.

அவள் விகடன் சமையல் சூப்பர் ஸ்டார்

ஒவ்வொரு பெண்களும் தங்களுடைய உணவுகள், உடல் ஆரோக்கியத்திற்கு என்னென்ன நன்மைகள் தருகின்றன என்பதை அழகாக எடுத்து சொன்னார்கள். சமையல் கலை மட்டுமல்ல உடல் உறுதிக்கான ஆரம்ப புள்ளியும் அது தான், எனவே உண்ணும் உணவில் அக்கறை கொள்ள வேண்டும் என்றனர். இதில் சிறப்பாக செய்திருந்த பத்து பேரை ஃபைனலுக்கு தேர்வு செய்வதற்காக, போட்டியில் பங்கெடுத்தவர்களைத் தேர்ந்தெடுத்தார் செஃப் தீனா.

முன்னதாக ராஜேஸ்வரி என்பவரை நேரடியாக ஃபைனல் போட்டிக்குத் தேர்வு செய்தார். பத்து பேர் அரங்கத்தில் ஒதுக்கப்பட்ட இடத்தில் தங்களுக்கான டிஷ்ஷை சிறப்பாக செய்த நிலையில் பரீனா, நித்யா, கவிதா ஆகிய மூன்று பேரை ஃபைனலுக்குத் தேர்வு செய்தார் செஃப் தீனா. மொத்தம் நான்கு பேர் ஃபைனலுக்குத் தேர்வாகியுள்ளனர்.

திருச்சி: `7 வயது சிறுவன் டு 80 வயது பாட்டி..!’ - களைகட்டிய அவள் விகடன் சமையல் சூப்பர் ஸ்டார்

மலைக்கோட்டை மாநகரமான திருச்சியில் அவள் விகடன் சார்பில் நடத்தப்படும் `சமையல் சூப்பர் ஸ்டார்’ நிகழ்ச்சி விமர்சையாக தொடங்கி நடைப்பெற்று முடிந்திருக்கிறது. ராகி புட்டு, சிகப்பு அரிசி பாயசம், பொரிமாவு ஸ்வீ... மேலும் பார்க்க

71 பேர்; நூற்றுக்கணக்கான உணவு வகைகள் - கமகமக்கும் திருச்சி அவள் விகடன் சமையல் சூப்பர் ஸ்டார் போட்டி!

மலைக்கோட்டை மாநகரமான திருச்சியில் அவள் விகடன் சார்பில் நடத்தப்படும் சமையல் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சி விமர்சையாக தொடங்கி நடைப்பெற்று வருகிறது. மூங்கில் அரிசி கிச்சடி, பூண்டு அல்வா, சங்குப்பூ பிரியாணி, ஆ... மேலும் பார்க்க

Swiggy 2024: 8 கோடி பிரியாணி பார்சல், மிட் நைட்டில் சிக்கன் பர்கர் - ஸ்விக்கியில் நடந்த உணவு வேட்டை

நம் நாட்டு மக்கள் என்னென்ன உணவுகளை ஆசையாக ஆர்டர் செய்துள்ளனர் என்பதை வெளிப்படுத்தும் விதமாக இந்த ஆண்டின் தரவுகளை வெளியிட்டுள்ளது Swiggy நிறுவனம். ஃபுட் டெலிவரி நாம் உணவகங்களுக்கு சென்று க்யூவில் நிற்க... மேலும் பார்க்க

மதுரை: சமையல் சூப்பர் ஸ்டார் கோலாகலம்; மூன்று இடங்களை பிடித்த நளன் பேத்திகள்!

வாசகிகளை பலவகையான நிகழ்ச்சிகளில் பங்கேற்க வைத்து அவர்களின் திறமைகளை வெளிக்கொண்டுவர உற்சாகப்படுத்தும் அவள் விகடன், சக்தி மசாலாவுடன் இணைந்து சமையல் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியை தமிழகமெங்கும் நடத்தி வருகிற... மேலும் பார்க்க