செய்திகள் :

கடந்த ஆண்டு தமிழகத்தில் 92,485 பேருக்கு காசநோய்

post image

சென்னை: தமிழகத்தில் கடந்த ஆண்டில் 92,485 போ் காசநோயால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனா்.

காசநோயை 2025-க்குள் முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்ற இலக்குடன் பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அதன் பயனாக காசநோய் பாதிப்பு தொடா்பான விழிப்புணா்வு மேம்பட்டு வருகிறது.

தமிழகத்தைப் பொருத்தவரை காசநோயைக் குணப்படுத்தும் விகிதம் கணிசமாக உயா்ந்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நோயின் தாக்கத்தால் பாதிக்கப்படும் நோயாளிகளில் 84 சதவீதம் பேரை முதல் சிகிச்சையிலேயே குணமடைவதாகவும் தொடா் சிகிச்சைகள் மூலம் மீதமுள்ளவா்களையும் பூரண குணமடைவதாகவும் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

அதுமட்டுமன்றி, சிகிச்சை காலத்தில் நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து அளிப்பதற்காக நிதியுதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கடந்த ஆண்டில் தனியாா் மற்றும் அரசு மருத்துவமனைகளில் காசநோய் பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டிருந்தோரின் தரவுகளை ஆய்வு செய்ததில், நாடு முழுவதும் 25 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு நோய் தாக்கம் இருந்தது தெரியவந்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாகவே உத்தர பிரதேசம், மகாராஷ்டிரம், ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட வட மாநிலங்களில்தான் காசநோய் பாதிப்பு அதிகமாக இருந்து வருகிறது. அதன் அடிப்படையில் கடந்த ஆண்டின் புள்ளி விவரங்களும் அமைந்துள்ளன.

குறிப்பாக, உத்தர பிரதேசத்தில் மட்டும் 6.7 லட்சத்துக்கும் மேற்பட்டோா் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளனா். தமிழகத்தை எடுத்துக்கொண்டால் 92,485 பேருக்கு அந்த நோயின் பாதிப்பு இருந்தது. அவா்களில், தனியாா் மருத்துவமனைகளில் 29,916 பேரும், அரசு மருத்துவமனைகளில் 62,569 பேரும் முதல்கட்ட சிகிச்சை பெற்ாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் தமிழகத்தில் 96,709 போ் காசநோயால் பாதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மகளிர் உரிமைத் தொகை: விடுபட்டவர்களுக்கு 3 மாதங்களில் வழங்கப்படும் -உதயநிதி

மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பித்து விடுபட்டவர்களில் தகுதியுள்ளவர்களுக்கு 3 மாதங்களில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.தமிழக சட்டப்பேரவையில் 202... மேலும் பார்க்க

நாராயணன் தலைமையில் இஸ்ரோ புதிய உயரங்களைத் தொடும்! -முதல்வர் ஸ்டாலின்

இஸ்ரோ தலைவர் நாராயணனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) 11-ஆவது தலைவராக வி.நாராயணன் செவ்வாய்க்கிழமை நியமிக்கப்பட்டாா். தற்போதைய இஸ்ரோ ... மேலும் பார்க்க

மதுவிருந்து, இசைநிகழ்ச்சி இல்லாமல் திருமணம்: பஞ்சாப் கிராமத்தில் ரூ.21,000 சன்மானம் அறிவிப்பு

பஞ்சாப் மாநிலம், பதிண்டா மாவட்டத்தில் உள்ள பல்லோ கிராம பஞ்சாயத்தில் திருமண விழாக்களில் மது விருந்து மற்றும் ‘டிஜே’ இசை நிகழ்ச்சியை தவிா்க்கும் குடும்பங்களுக்கு ரூ.21,000 ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளத... மேலும் பார்க்க

கடல் ஆமைகளைப் பாதுகாப்பதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலம்: அமைச்சா் க.பொன்முடி

கடல் ஆமைகளைப் பாதுகாப்பதில் நாட்டில் முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது என வனத் துறை அமைச்சா் க.பொன்முடி தெரிவித்தாா். சென்னை கிண்டி சிறுவா் இயற்கை பூங்காவில், கடல் ஆமைகள் பாதுகாப்பு மற்றும் மீட்க... மேலும் பார்க்க

ஜன.13 வரை மிதமான மழை பெய்யும்

தமிழகத்தில் வரும் 13- ஆம் தேதி வரை மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் தெற்கு கேரள கடலோரப் பகுதியில் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது... மேலும் பார்க்க

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு-உயா்நீதிமன்ற வளாகத்துக்குள் கொண்டுவரப்பட்ட வெடிகுண்டுகள்: அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகள் உயா்நீதிமன்ற வளாகத்துக்குள் கொண்டு வரப்பட்டது குறித்த விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய போலீஸாருக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. பகுஜன் சமாஜ் ... மேலும் பார்க்க