செய்திகள் :

'உலகின் 6 நாடுகளில் ஒன்று இந்தியா!' - பெருமை சேர்த்த தமிழர்; இனி இஸ்ரோ தலைவர்-யார் இந்த V.நாராயணன்?

post image

உலகத்தையே இந்தியாவை திரும்பி பார்க்க வைத்ததில் இஸ்ரோவிற்கு முக்கிய பங்கு உண்டு. இப்போது அந்த இஸ்ரோவையே தமிழ்நாடு பக்கம் திரும்பி பார்க்க வைத்திருக்கிறார் V. நாராயணன்.

ஆம்...தமிழ்நாட்டை சேர்ந்த V. நாராயணன் தற்போது இஸ்ரோவின் தலைவராக பொறுப்பேற்க உள்ளார். ஒரு தமிழர் இஸ்ரோ தலைவர் ஆவது இது முதல்முறை அல்ல. இதற்கு முன்பு 2018 - 2022 காலக்கட்டத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த சிவன் இஸ்ரோ தலைவராக இருந்திருக்கிறார்.

இஸ்ரோவின் தற்போதைய தலைவர் சோம்நாத்திற்கு பின், வரும் 14-ம் தேதி இஸ்ரோ தலைவராக பொறுப்பேற்க உள்ளார் V. நாராயணன். இவர் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார். 1984-ம் ஆண்டு இஸ்ரோவில் காலடி எடுத்துவைத்த இவர், ராக்கேட் மற்றும் விண்கல புரோபல்ஷன் நிபுணர் ஆவார்.

யார் இந்த V.Narayanan?!

இவர் ASLV, PSLV ராக்கெட்டுகளில் முக்கிய பங்காற்றியிருக்கிறார். இந்தியாவில் காம்ப்ளக்ஸ் மற்றும் உயர் செயல்திறன் கொண்ட கிரையோஜெனிக் அமைப்பு உள்ளது. உலகத்திலேயே இந்த அமைப்பு 6 நாடுகளிடம் மட்டுமே உள்ளது. அதில் ஒன்று இந்தியா. இப்படி ஒரு பெருமையை இந்தியாவிற்கு வாங்கி தந்தவர் V. நாராயணன். இந்த அமைப்பின் பிள்ளையார் சுழி முதல் வெற்றி வரை அனைத்து பெருமைகளும் இவரையே சேரும்.

2017-ம் ஆண்டில் இருந்து 2037-ம் ஆண்டு வரை இந்தியாவின் புரோபல்ஷன் எப்படி செயல்பட வேண்டும்...எந்தப் பாதையில் செல்ல வேண்டும் என்ற ரோட் மேப்பை இறுதி செய்தவர் இவர் தான்.

இஸ்ரோ தலைவராக பொறுப்பேற்க உள்ள இவர், இப்போது லிக்விட் புரோபல்ஷன் சிஸ்டம் மையத்தின் இயக்குநராக உள்ளார்.V. நாராயணன் அவர்களுக்கு பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Ooty: முழுவதுமாக டீசல் இன்ஜினுக்கு மாறும் மலை ரயில்; சோதனை ஓட்டத்தில் ஈடுபடும் ரயில்வே நிர்வாகம்

பிரிட்டிஷ் ஆட்சியின்போது மேட்டுப்பாளையம் முதல் ஊட்டிக்கு மலை ரயில் சேவை தொடங்கப்பட்டது. அடர்ந்த வனத்திற்கு ஊடாகவும் ஆறுகளுக்குக் குறுக்கேயும் ரயில் பாதை அமைக்கப்பட்டது. செங்குத்து மலைச்சரிவில் சுவிட்ச... மேலும் பார்க்க

AI: ஏ.ஐ-யிடம் கேட்கக் கூடாத கேள்விகளும், சொல்லக்கூடாத ரகசியங்களும்... கவனம் மக்களே!

சந்தேகங்களை கூகுளில் கேட்ட காலம் போய், எதுவாக இருந்தாலும் ஏ.ஐ-யிடம் கேட்கும் காலம் வந்துவிட்டது. நியூயார்க்கில் உள்ள ஆராய்ச்சி நிறுவனம் எடுத்த சர்வே ஒன்றில், ஐந்தில் ஒரு அமெரிக்கர் உடல்நலம் சம்பந்தமான... மேலும் பார்க்க

``இனி போர்களில் AI'' - உக்ரைன் அதிகாரி சொல்வதென்ன?

எதிர்காலத்தில் ராஜ்ஜியங்களுக்கு இடையிலான போர்களில் கூட செயற்கை நுண்ணறிவு ஆதிக்கம் செலுத்தும் எனக் கூறப்படுகிறது. இதனை சாத்தியப்படுத்துவதற்கான மிக முக்கிய கச்சா பொருள் உக்ரைனிடம் உள்ளது. உக்ரைன் - ரஷ்ய... மேலும் பார்க்க

CCTV: 'உங்கள் வீட்டிற்கு இலவச சிசிடிவி கேமரா வேண்டுமா... எங்கே, எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?'

சிசிடிவி கேமராக்கள் அவசியமாகிறதுதிருட்டு, பாலியல் வன்கொடுமைகள், குழந்தை கடத்தல், விபத்துகள், கொலை, கொள்ளை என நாளுக்கு நாள் சமூகத்தில் குற்றங்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. குற்றத்தை தடுக்க, அல்லது... மேலும் பார்க்க

Chat GPT: இனி வாட்ஸ்ஆப்பிலேயே பயன்படுத்தலாம்; Meta AI உடன் போட்டிப்போடும் Open AI?

ஓபன் ஏஐ நிறுவனம் சோதனை முயற்சியாக 1-800-ChatGPT என்ற சேவை எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம் நீங்கள் உங்கள் மெஸ்ஸேஜிங் ஆப் மற்றும் வாட்ஸ்ஆப்பில் இந்த எண்ணை சேவ் செய்து சேட் ஜிடிபியுடன் உரையாடலாம்... மேலும் பார்க்க

Elon Musk: 'G - Mail' க்கு மாற்றாக 'X - Mail' - நெக்ஸ்ட் அப்டேட் கொடுத்த எலான் மஸ்க்

எலான் மஸ்க் எதையும் விட்டு வைப்பதாக இல்லை. எல்லாத் துறைகளிலும் கால் பதித்து தனது பிஸினஸை விரிவுப்படுத்திக் கொண்டே இருக்கிறார்.விண்வெளியில் மார்ஸில் வீடு கட்டுவது தொடங்கி அரசியல் பிரசாரங்கள் வரை எல்லாவ... மேலும் பார்க்க