செய்திகள் :

வாழ்த்துங்களேன்!

post image
பிறந்த நாள், திருமண நாள், சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம்... இவை போன்று இன்னும் பல்வேறு இனிய வைபவங்களைக் காணும் வாசகர்களுக்குச் சக்தி விகடனின் வாழ்த்துகள்!

அன்பார்ந்த வாசகர்களே!

உங்கள் சக்தி விகடன் 21-ம் ஆண்டில் வெற்றிநடை போடும் இந்த இனிய தருணத்தில், உங்களுக்குப் பிடித்தமான வாழ்த்துங்களேன் பகுதியில் நீங்கள் பதிவு செய்யும் பிரார்த்தனைகள், பிரசித்திபெற்ற பரிகாரத் தலங்களில் சமர்பிக்கப்படவுள்ளன.

பிறந்தநாள், திருமண நாள், சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் முதலான இனிய தருணங்களை முன்னிட்டு, உங்களுக்காக அல்லது உங்களின் உற்றார்-உறவினர் மற்றும் நண்பர்களுக்கான பிரார்த்தனைகளை, உங்களின் மொபைல் போன் மூலம் பதிவு செய்யுங்கள். அதற்கு, இந்தப் பக்கத்தில் உள்ள QR Code-ஐ ஸ்கேன் செய்து, அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களைப் பூர்த்தி செய்தால் போதும்.

அவ்வாறு பதிவு செய்யப்படும் விவரப்படி, இனிய தருணங்களைக் கொண்டாடும் அன்பர்களுக்கான பிரார்த்தனைகள், அவர்களின் வாழ்வில் சகல வளங்களும் பொங்கிப் பெருகிடும் வகையில், தமிழகத்தின் வழிபாட்டுச் சிறப்பு மிக்க ஆலயங் களில் சமர்ப்பிக்கப்படும்.

21.1.25 முதல் 3.2.25 வரை பிரார்த்தனைக்குப் பதிவு செய்ய வேண்டிய கடைசித் தேதி: 14.1.25

தோரணமலை முருகன்

தோரணமலை முருகன் கோயிலில் சிறப்புப் பிரார்த்தனை..!

21.1.25 முதல் 3.2.25 வரையிலும் சுப நிகழ்வுகள், இனிய தருணங்களைக் கொண்டாடும் அன்பர்களுக்கான சிறப்புப் பிரார்த்தனை, தென்காசியிலிருந்து கடையம் செல்லும் சாலையில் அமைந்துள்ள தோரணமலை முருகன் கோயிலில் சமர்ப்பிக்கப்படுகிறது.

முருகன் குகைக்கோயிலில் அருளும் இந்தத் தலத்தில் அகத்தியர், அவரின் சீடரான தேரையர் பெரிய அளவில் மருத்துவச்சாலை நிறுவி, பலருக்கும் வைத்தியம் செய்த சான்றுகள் உண்டு. தேரையர் ஜீவ சமாதி அடைந்ததும் இங்குதான் என்பர். முருகனின் திருவருளும் சித்தர்களின் சாந்நித்தியமும் நிறைந்த இந்தத் திருத்தலத்தில், வாசகர்கள் நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் பெறவும் அவர்களின் வேண்டுதல்கள் யாவும் நிறைவேறவும் வேண்டி வாழ்த்துப் பிரார்த்தனைகள் சமர்ப்பிக்கப்படவுள்ளன!

காஞ்சி மகான் சொன்ன வியதீபாத வழிபாடு; வினைகளைப் போக்கிடும் சிவதரிசனம்

காஞ்சி மகான் சொன்ன வியதீபாத வழிபாடு! வியதீபாத தினம் - மகேஸ்வரப் பெருமானும் மனோன்மனி எனும் சக்தியும் இணைந்த நாள் என்றும் சாஸ்திரங்கள் கூறுகின்றன. வளம் தரும் வியதீபாத தரிசனம் 04.01.2025, சனிக் கிழமை, அத... மேலும் பார்க்க

நிகும்பலா ஹோமம்: பிரச்னைகளைத் தீர்த்து நீங்கள் விரும்பியபடி வாழ்வை அருளும் விசேஷ வழிபாடு

அதர்வண வேதத்தில் ஹோமங்கள் மூவகையாக சொல்லப்பட்டுள்ளது. உலக அமைதிக்கு சாந்திகம், ஆசைகளை நிறைவேற்றும் பெளஷ்திகம், தீமைகளை ஒழிக்கும் ஆபிசாரிகம் என்பவை அவை. அதில் மூன்றுக்குமான ஒரே ஹோமம் நிகும்பலா ஹோமம் என... மேலும் பார்க்க

Christmas: கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு மதுரை தூய மரியன்னை ஆலயத்தில் சிறப்பு திருப்பலி! - Album

கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலிகிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலிகிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலிகிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலிகிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலிகிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலிகிறிஸ்துமஸ் சிறப்பு திருப்... மேலும் பார்க்க

கோவை: மருதமலை, பேரூர் கோயில்களுக்கு கும்பாபிஷேகம் - தேதி வெளியிட்ட அமைச்சர் சேகர் பாபு

கோவை ஆனைமலை மாசாணியம்மன் கோயில் மற்றும் மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர் பாபு ஆய்வு மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “பேரூர் பட்டீஸ்வர சுவ... மேலும் பார்க்க

திருச்செந்தூர்: ஒரு மாதத்திற்குப் பிறகு கோயிலை வலம் வந்த தெய்வானை யானை - மகிழ்ச்சியில் பக்தர்கள்!

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 26 வயதுபெண் யானையான தெய்வானை வளர்க்கப்பட்டு வருகிறது. கடந்த மாதம் 18-ம் தேதி உதவி பாகர் உதயக... மேலும் பார்க்க

சபரிமலை: குழந்தைகளுக்கு சோறுட்டு முதல் களபம் எழுந்தருளல் வரை... சந்நிதான காட்சிகள்! Photo Album

மலையேற்றத்துக்கு இடையே ஓய்வெடுக்கும் பக்தர்தாகம் தீர்கும் சேவைகுழந்தையுடன் ஐயப்பனை காணபக்தர்கள் கூட்டம்சன்னிதானத்தில் கழபம் எழுந்தருளல்சபரிமலைகுழந்தைகளுக்கு முதல் சோறூட்டும் நிகழ்வுசபரிமலைசபரிமலைசோறூட... மேலும் பார்க்க