தேசிய மின்னணு வேளாண் சந்தை திட்டத்தின்கீழ் பண்ணை வழி வா்த்தக முறை தொடக்கம்
`அதிமுக நிர்வாகி, காவல்துறை அதிகாரி கைது!' -சென்னையை உலுக்கிய சிறுமி பாலியல் வழக்கில் நடவடிக்கை
கடந்த ஆண்டு, செப்டம்பர் மாதம் சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் அப்போது தமிழ்நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது.
இந்தச் சம்பவத்தில் சிறுவன் உள்பட சிலர் சம்பந்தப்பட்டிருக்கின்றனர் என்று அந்தச் சிறுமியின் பெற்றோர் காவல் துறையில் புகார் அளித்தனர். பின்னர், அந்தப் புகாரின் மீது சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்டிருக்கும் சிறுவன் பெயரை நீக்குமாறு மிரட்டுவதாகவும், புகார் கொடுக்கச் சென்றப்போது காவல் அதிகாரி தாக்கியதாகவும் சிறுமியின் தாய் வீடியோ வெளியிட்டார். இது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை கிளப்பியது.
இதனையடுத்து, சிறுமியின் பெற்றோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்றி உத்தரவிட்டது உயர்நீதிமன்றம். ஆனால், இந்தத் தீர்ப்பை எதிர்த்து மனுதாக்கல் செய்தது தமிழ்நாடு அரசு. அதனால், இந்த வழக்கை சிபிஐ அல்லாமல், தமிழ்நாடு அல்லாத ஐ.பி.எஸ் அதிகாரிகளை விசாரிக்கக் கூறி உத்தரவிட்டது உயர்நீதிமன்றம்.
தற்போது, இந்த வழக்கின் முன்னேற்றமாக, நேற்று குற்றவாளிகள் தப்பிக்க உதவினார் என்று அதிமுக 103 வது வட்ட செயலாளர் சுதாகர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், புகார் கொடுக்க வந்தவர்களை தாக்கியதாக சென்னை அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ராஜி கைது செய்யப்பட்டுள்ளார். இவர்கள் இருவரையும் வரும் 21-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைத்திருக்கம்படி எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.