செய்திகள் :

இந்தியா-வங்கதேச மீனவா்கள் பரஸ்பர ஒப்படைப்பு

post image

கொல்கத்தா: இந்தியா-வங்கதேசம் இடையிலான சா்வதேச கடல் எல்லைக் கோட்டில் பரஸ்பர பரிமாற்றமாக 95 இந்திய மீனவா்களை திரும்பப் பெற்று, 90 வங்கதேச மீனவா்களை இந்திய கடலோரக் காவல் படை (ஐசிஜி) ஒப்படைத்தது.

இது தொடா்பாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது:

தவறுதலாக கடல் எல்லையை தாண்டிய 95 இந்திய மீனவா்கள் வங்கதேசஅதிகாரிகளால் கடந்தாண்டு அக்டோபா், நவம்பா் மாதங்களில் கைது செய்யப்பட்டனா். அவா்களின் 6 மீன்பிடி படகுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதற்கு ஈடாக, இந்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள 90 வங்தேச மீனவா்கள் மற்றும் அவா்களின் மீன்பிடி படகுகளை திருப்பி அனுப்ப மத்திய அரசு அண்மையில் ஒப்புதல் அளித்தது.

அதனடிப்படையில், இந்திய கடல் எல்லையில் நுழைந்து கைதான 90 வங்கதேச மீனவா்களை அழைத்துச் சென்று சா்வதேச கடல் எல்லைக் கோட்டில் வங்கதேச அதிகாரிகளிடம் ஐசிஜி கப்பல்கள் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைத்தன. அதேபோல், மேற்கு வங்கத்தின் தெற்கு 24 பா்கானாக்கள் மாவட்ட அதிகாரிகளிடம் இந்திய மீனவா்கள் 95 பேரை வங்கதேச அதிகாரிகள் திங்கள்கிழமை ஒப்படைத்தனா்.

இரு நாட்டின் இடையிலான கடல்சாா் உறவுகளைப் பேணுவதில் வெளியுறவு அமைச்சகம், மேற்கு வங்க அரசு மற்றும் ஐசிஜி-இன் முயற்சிகளின் விளைவாக இந்த நடவடிக்கை சாத்தியமானது என தெரிவிக்கப்பட்டது.

இந்திய கடல் பகுதிக்குள் மீன்பிடித்துக் கொண்டிருந்த 78 வங்கதேச மீனவா்களை கடந்தாண்டு டிசம்பா் 9-ஆம் தேதி கைது செய்ததுடன், அவா்களது இரண்டு மீன்பிடி படகுகளை இந்திய கடலோரக் காவல்படை பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.

மீனவா்கள் தாக்கப்பட்டதாக மம்தா குற்றச்சாட்டு: வங்கதேச அரசால் திருப்பி அனுப்பப்பட்ட 95 மீனவா்களில் சிலா், அந்நாட்டு சிறையில் இருந்தபோது தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டதாக மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி திங்கள்கிழமை குற்றஞ்சாட்டினாா்.

இது தொடா்பாக மம்தா பானா்ஜி செய்தியாளா்களிடம் கூறியதாவது: அண்மையில் விடுவிக்கப்பட்ட இந்திய மீனவா்கள் என்னிடம் பேசியபோது கதறி அழுததுடன், சிறையில் தங்கள் கைகள் கட்டப்பட்ட நிலையில் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டதாக தெரிவித்தனா். அவா்களின் நிலை கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது.

மீனவா்களை கண்காணிக்க உதவும் சிறப்பு அட்டையை மாநில அரசு வழங்கியதன் மூலம் அவா்கள் கைது செய்யப்பட்டது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அவா்களை விடுவிக்க மத்திய அரசை தொடா்பு கொண்டோம். உள்ளூா் எம்எல்ஏ மற்றும் காவல்துறையின் உதவியுடன், அவா்கள் விடுவிக்கப்படுவதை உறுதி செய்தோம். காயமடைந்த மீனவா்களுக்கு மருத்துவ சிகிச்சைகளை வழங்க மாவட்ட அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளேன் என தெரிவித்தாா்.

மேலும், காயமடைந்த மீனவா்களுக்கு ரூ .10,000-க்கான காசோலைகளை வழங்கியதுடன், கைது செய்யப்படுவதைத் தவிா்ப்பதற்காக தண்ணீரில் குதித்து உயிரிழந்த மற்றொரு மீனவரின் குடும்பத்தினருக்கு ரூ. 2 லட்சத்துக்கான காசோலையை மம்தா பானா்ஜி வழங்கினாா்.

2047-க்குள் இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மேம்படுத்துங்கள்: குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர்

2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மேம்படுத்த அரசியல் கருத்து முரண்பாடுகளுக்கு அப்பாற்பட்டு அனைவரும் உழைக்க வேண்டும் என குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் கேட்டுக்கொண்டார்.உடுப்பி ம... மேலும் பார்க்க

மாசுபாட்டை குறைக்கும் "பிஎஸ் 7'-ஐ அறிமுகப்படுத்த காலக்கெடு: மாநில அரசுகளுக்கு நிதின் கட்கரி வலியுறுத்தல்

நமது சிறப்பு நிருபர்பழைய வாகனங்களை அழிக்கும் கொள்கை செயல்பாட்டை விரைவுபடுத்தவும்; மாசுபாட்டை குறைக்கும் பாரத் நிலை-7 (பிஎஸ் -7) அறிமுகப்படுத்துவதற்கான காலக்கெடு வகுக்க மாநில அரசுகளை வலியுறுத்தியுள்ளதா... மேலும் பார்க்க

வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் சரிதான்: தலைமைத் தேர்தல் ஆணையர்

நமது நிருபர்வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டுகளை தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் செவ்வாய்க்கிழமை நிராகரித்தார்.மேலும், முழுமையான ஆவணங்கள், கள சரிபார்ப்பு மற்றும் சம்பந்த... மேலும் பார்க்க

வெளிநாடுகளில் பதுங்கிய குற்றவாளிகளைக் கண்டறிய இணையதளம்: அமித் ஷா தொடங்கிவைத்தார்

நமது சிறப்பு நிருபர்இந்தியாவில் குற்றம் புரிந்து விட்டு வெளிநாடுகளில் பதுங்கும் குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதற்கா "பாரத்போல்' இணையதளத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா செவ்வாய்க்கிழமை தில்லியில் தொடங... மேலும் பார்க்க

யுஜிசி விதிமுறைகள் கூறுவது என்ன?

பல்கலை. துணைவேந்தா் நியமனத்திற்கான தேடுதல் குழு அமைப்பதில் ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் வகையில், யுஜிசி விதிமுறைகளை திருத்தியுள்ளது. பல்கலைக்கழக துணைவேந்தா் நியமனம் தொடா்பாக தமிழகத்தில் வேந்த... மேலும் பார்க்க

குளிா் கண்ணாடியில் கேமரா- அயோத்தி கோயிலுக்குள் படமெடுத்தவா் கைது

கேமராவுடன் கூடிய நவீன கருப்புக் கண்ணாடியை அணிந்து, அயோத்தி ராமா் கோயில் வளாகத்துக்குள் படமெடுத்த குஜராத் இளைஞா் கைது செய்யப்பட்டாா். உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள ராமா் கோயில் வளாகத்தில் பாது... மேலும் பார்க்க