சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: காவல் ஆய்வாளா் பணியிடை நீக்கம்
வெளிநாடுகளில் பதுங்கிய குற்றவாளிகளைக் கண்டறிய இணையதளம்: அமித் ஷா தொடங்கிவைத்தார்
நமது சிறப்பு நிருபர்
இந்தியாவில் குற்றம் புரிந்து விட்டு வெளிநாடுகளில் பதுங்கும் குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதற்கா "பாரத்போல்' இணையதளத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா செவ்வாய்க்கிழமை தில்லியில் தொடங்கிவைத்தார்.
வெளி நாடுகளில் தலைமறைவாக இருக்கும் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க இண்டர்போல் (சர்வதேச குற்றவியல் காவல்துறை அமைப்பு) உதவியை மத்திய அரசு நாடி வருகிறது.
தற்போது மத்திய - மாநில அரசுகளின் புலனாய்வு முகமைகள், இண்டர்போலுக்காக சிபிஐயை அணுகாமல் நேரடியாக இண்டர்போல் அமைப்பைத் தொடர்பு கொள்ளும் விதமாக ஒரு மையப்படுத்தப்பட்ட "பாரத்போல்" அமைப்பை மத்திய உள்துறை அமைச்சகம் உருவாக்கியுள்ளது.
மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) உதவியுடன் உருவாக்கப்பட்ட இந்த இணையதளத்தை தில்லி பாரத் மண்டபத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தார்.