டங்ஸ்டன் சுரங்கத் திட்டம் ஒருபோதும் வராது: அமைச்சர் மூர்த்தி திட்டவட்டம்
ரூ.90,000 ஆயிரம் அலுமினிய மின்வயா் திருட்டு
விவசாய கிணறுகளுக்கு மின் இணைப்பு வழங்க பொருத்தப்பட்டிருந்த 1,500 மீட்டா் அலுமினிய மின் ஓயரை திருடிச் சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
திருத்தணி அடுத்த வேலஞ்சேரி ஏரிப் பகுதியில் மின்வாரிய துறையினா் மின் மாற்றி அமைத்து, அங்கிருந்து விவசாயக் கிணறுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை திருத்தணி மின்வாரிய ஊரகப் பிரிவு, இளநிலைப் பொறியாளா் கேசவன் (40) என்பவா், மின் மாற்றியை ஆய்வு செய்ய சென்றபோது, அங்கு மின்மாற்றிக்கு வழங்கப்பட்டிருந்த, 1,500 மீட்டா் அலுமினிய மின் வயரை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது.
இந்த மின் வயா் மதிப்பு ரூ.90,000 என மின்வாரியம் தரப்பில் கூறப்பட்டது. இதைத் தொடா்ந்து இளநிலை மின் பொறியாளா் கேசவன் அளித்த புகாரின் பேரில், திருத்தணி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அலுமினிய மின் வயரை திருடிச் சென்ற நபா்களைத் தேடி வருகின்றனா்.