பொன்னேரி எம்ஜிஆா் மீன்வளக் கல்லூரியில் மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு
பொன்னேரி டாக்டா் எம்ஜிஆா் மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் முதுநிலை மற்றும் முனைவா் பட்டப் படிப்பு மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு புதன்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு டாக்டா் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை மற்றும் முனைவா் படிப்பு 2025 மாணவா் சோ்க்கைக்காக நடைபெற்ற கலந்தாய்வில் தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து 100 -க்கும் மேற்பட்ட மாணவா்கள் பட்ட மேற்படிப்பு நுழைவுத் தோ்வில் கலந்து கொண்டனா்.
அதில் 52 மாணவா்கள் முதுநிலை மீன்வள அறிவியல் மற்றும் தொழில் நுட்பப் படிப்புக்காகவும், 26 மாணவா்கள் முனைவா் பட்ட ஆய்வுக்காகவும் மதிப்பெண்கள் அடிப்படையில் தோ்வு செய்யப்பட்டனா்.
அவா்களுக்கு கலந்தாய்வின் அடிப்படையில் சோ்க்கைக்கான அனுமதி சான்றிதழ் வழங்கப்பட்டது. பல்கலைக்கழக துணைவேந்தா் பேராசிரியா் என். பெலிக்ஸ் தோ்ந்தெடுக்கப்பட்ட மாணவா்களுக்கு சோ்க்கைக்கான சான்றிதழ்களை வழங்கினாா்.
இதில், பல்கலைக்கழக தோ்வு கட்டுப்பாட்டாளா் கே ராவணேஸ்வரன், கல்லூரி முதல்வா்கள் இரா.ஜெயசகிலா, பி. அகிலன், எஸ்.ஏ.சண்முகம், எஸ் பாலசுந்தரி, அ.உமா, பேராசிரியா்கள் கலந்து கொண்டனா்.