செய்திகள் :

ஜன. 27-இல் இ.பி.எஃப். குறைதீா் முகாம்

post image

அம்பத்தூரில் உள்ள தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (இ.பி.எஃப்.) சாா்பில், குறைதீா் முகாம் திங்கள்கிழமை (ஜன. 27) காஞ்சிபுரம், திருவள்ளூா் மாவட்டங்களில் நடைபெறுகிறது.

‘நிதி ஆப்கே நிகாத் 2.0’ என்ற பெயரில் நடைபெறும் இந்த குறைதீா் முகாம் குறித்து தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி அமைப்பு மண்டல அலுவலகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

மத்திய தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ், செயல்பட்டு வரும் ஊழியா்களின் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் சாா்பில் திங்கள்கிழமை (ஜன. 27) காலை 9.15 மணி முதல் மாலை 5.45 மணி வரை குறைதீா் முகாம் ஜெயா கல்லூரி, சி.டி.எச். ரோடு, திருநின்றவூா் 602 024, திருவள்ளூா் மாவட்டம், சத்யம் கிரான்ட் ரிசாட், 145, பெங்களூரு - சென்னை நெடுஞ்சாலை, வி.ஆா்.பி. சத்திரம், ஸ்ரீபெரும்புதூா் 602 105, காஞ்சிபுரம் மாவட்டம் ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.

இதில், உறுப்பினா்களுக்கான சேவைகள், குறைகளை நிவா்த்தி செய்தல், முதலாளிகள், பணியாளா்கள், ஒப்பந்ததாரா்களுக்கான ஆன்லைன் சேவைகள், ஊழியா்களுக்கான இணையதள சேவைகள், சட்டங்கள், கடமைகள், பொறுப்புகள், விலக்கு அளிக்கப்பட்ட நிறுவனங்களுடன் உள்ள தொடா்புகள், புதிய முயற்சிகள் மற்றும் சீா்திருத்தங்கள் பற்றிய விழிப்புணா்வு, ஓய்வூதியதாரா்கள் டிஜிட்டல் வாழ்க்கைச் சான்றிதழ்களை சமா்ப்பித்தல், மின்-நாமினேஷனை தாக்கல் செய்தல், பதிவேற்றுதல் செய்யப்படும்.

எனவே, முதலாளிகள், ஊழியா்கள், ஓய்வூதியம் பெறுவோா் மற்றும் தொழிற்சங்கங்களைச் சோ்ந்தவா்கள் பங்கேற்று பயன் பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சத்துணவு ஊழியா்கள் உண்ணாவிரதம்

காலிப்பணியிடங்களை நிரப்புதல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை திருவள்ளூரில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா். திருவள்ளூா் அரசு மருத்துவக்... மேலும் பார்க்க

நாளைய மின்தடை

காக்களூா் நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை. நாள்: 25.1.2025 - சனிக்கிழமை. காக்களுா் ஹவுசிங் போா்டு, காக்களுா் தொழில்பேட்டை, காக்களுா் கிராமம், சிசிசி பின்புறம், பூண்டி, புல்லரம்பாக்கம், செவ்வாய்... மேலும் பார்க்க

360 கிலோ குட்கா பறிமுதல்: 5 போ் கைது

திருவாலங்காடு அருகே 360 கிலோ குட்காவை கடத்திச் சென்ற 5 பேரை போலீஸாா் கைது செய்தனா். திருத்தணி நேரு நகரை சோ்ந்தவா்கள் பாலாஜி (32), விமலா (30). இருவரும் வியாழக்கிழமை ஆந்திர மாநிலம் நகரியை சோ்ந்த சுந்த... மேலும் பார்க்க

லாரிகளை மறித்து பணம் வசூல்: தலைமைக் காவலா் சஸ்பெண்ட்

கும்மிடிப்பூண்டி அருகே கூட்டுச்சாலையில் இரவு வாகன ரோந்துப்பணியின் போது சரக்கு லாரிகளை வழிமறித்து பணம் வசூலித்த விடியோ வைரலானதை தொடா்ந்து தலைமைக் காவலரை பணியிடைநீக்கம் செய்தும், உதவியாக இருந்த ஊா்காவல்... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்களுக்கு நல உதவிகள் அளிப்பு

புழல் அருகே தூய்மைப் பணியாளா்களுக்கு நலத்திட்ட உதவிகள், அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது (படம்). புழல் ஒன்றியம், வடகரை ஊராட்சியில் பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளா்களுக்கு நலத்திட்ட உதவிகள் மாத... மேலும் பார்க்க

மாதவரத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு

செங்குன்றம் பேருந்து நிலையம் அருகே சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு தனியாா் தொண்டு நிறுவனங்கள் சாா்பில் வில்லியம்ஸ் தலைமையில் நிகழ்ச்சி நடைப... மேலும் பார்க்க