செய்திகள் :

பருத்​திப்​பட்டு பசுமை பூங்​கா​வில் புதிய கிளை நூல​கம் திறப்பு

post image

ஆவடி அருகே ரூ.38 லட்​சத்​தில் கோவில்​பா​தாகை ஏரி உப​ரி​நீர் வடி​கால் சீர​மைப்​புப் பணியை சிறு​பான்​மை​யி​னர் நலத் துறை அமைச்​சர் சா.மு.​நா​சர் புதன்​கி​ழமை அடிக்​கல் நாட்டி தொடங்கி வைத்​தார்.

ஆவடி அருகே கோவில்​ப​தாகை ஏரி ஒவ்​வொரு ஆண்​டும் பருவ மழை​யி​லும் நிறைந்து உப​ரி​நீர் வடி​கா​லில் செல்ல முடி​யா​மல், குடி​யி​ருப்பு பகு​தி​க​ளி​லும் கோவில்​ப​தாகை நெடுஞ்​சா​லை​யி​லும் பெருக்​கெ​டுத்து ஓடு​கி​றது. இத​னால் பொது​மக்​கள், வாகன ஓட்டி​கள் அவ​திப்​பட்டு வரு​கின்​ற​னர்.

இது குறித்து சிறு​பான்​மை​யி​னர் நலத் துறை அமைச்​சர் சா.மு.​நா​ச​ரின் கவ​னத்​திற்கு அந்​தப் பகுதி மக்​கள் கொண்டு சென்​ற​னர். அவர் உப​ரி​நீர் வடி​காலை ஆழப்​ப​டுத்தி சீர​மைக்க ஆவடி மாந​க​ராட்சி அதி​கா​ரி​க​ளுக்கு உத்​த​ர​விட்​டார்.

இதை​ய​டுத்து, உப​நீர் வடி​காலை ரூ 38.30 லட்​சம் மதிப்​பீட்​டில் சீர​மைக்க நிதி ஒதுக்​கீடு செய்​யப்​பட்​டது. இந்த நிலை​யில், புதன்​கி​ழமை மேற்​கண்ட பணியை அமைச்​சர் சா.மு.​நா​சர் பூமி பூஜை செய்து அடிக்​கல் நாட்டி தொடங்கி வைத்​தார்.

முன்​ன​தாக அவர், ஆவடி வீட்டு வசதி வாரி​யக் குடி​யி​ருப்​பில் சேத​ம​டைந்த கட்ட​டத்​தில் இயங்கி வந்த ஆவடி கிளை நூல​கத்தை, ஆவடி பருத்​திப்​பட்டு பசுமை பூங்​கா​வில் உள்ள புதிய கட்ட​டத்​துக்கு இட​மாற்​றம் செய்து மக்​கள் பயன்​பாட்​டுக்​குத் திறந்து வைத்​தார்.

நிகழ்​வில் ஆவடி மேயர் கு.உ​த​ய​கு​மார், ஆணை​யர் எஸ்.​கந்​த​சாமி, மாவட்ட வரு​வாய் அலு​வ​லர் ஆ.ராஜ்​கு​மார், மாந​க​ரப் பொறி​யா​ளர் பி.வி.​ர​விச்​சந்​தி​ரன், மாவட்ட நூலக அலு​வ​லர் மு.க​விதா, ஆவடி மண்​ட​லக் குழு தலை​வர்​கள் ஜி.ரா​ஜேந்​தி​ரன், அமுதா சேகர், திமுக நிர்​வா​கி​கள் சண்.​பி​ர​காஷ், பொன்.​வி​ஜ​யன், வீ.சிங்​கா​ரம், பு.கி​ருஷ்​ண​மூர்த்தி, ரவிச்​சந்​தி​ரன், தண்​டுரை கோபி, குமார், மீனாட்சி குமார் உள்​ளிட்​டோர் கலந்து கொண்​ட​னர்.

பங்​குச் சந்​தை​ மோசடி: ரூ.56 லட்​சம் உரி​ய​வர்​க​ளி​டம் ஒப்​ப​டைப்பு

ஆ​வடி பகு​தி​யில் இணை​ய​த​ளம் மூலம் பங்​குச் சந்தை மற்​றும் பகு​தி​நேர வேலை வாய்ப்பு எனக் கூறி மோசடி செய்​யப்​பட்ட ரூ.56.43 லட்​சத்தை உரி​ய​வர்​க​ளி​டம் காவல் ஆணை​யர் கி.சங்​கர் புதன்​கி​ழமை ஒப்​ப​டைத... மேலும் பார்க்க

ரூ.90,000 ஆயிரம் அலுமினிய மின்வயா் திருட்டு

விவசாய கிணறுகளுக்கு மின் இணைப்பு வழங்க பொருத்தப்பட்டிருந்த 1,500 மீட்டா் அலுமினிய மின் ஓயரை திருடிச் சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். திருத்தணி அடுத்த வேலஞ்சேரி ஏரிப் பகுதியில் மின்வாரிய துறைய... மேலும் பார்க்க

பொன்னேரி எம்ஜிஆா் மீன்வளக் கல்லூரியில் மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு

பொன்னேரி டாக்டா் எம்ஜிஆா் மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் முதுநிலை மற்றும் முனைவா் பட்டப் படிப்பு மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு புதன்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு டாக்டா் ஜெ.ஜெயலலிதா ம... மேலும் பார்க்க

பெண் மீது தாக்குதல்: போலீஸாா் விசாரணை

திருத்தணி அருகே அடகு வைத்த தங்க நகையை மீட்டு தரக்கோரிய பெண்ணை உருட்டு கட்டையால் தாக்கிய 2 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா். திருத்தணி அடுத்த தாழவேடு காலனியைச் சோ்ந்த டேவிட் மனைவி பூங்கொடி(26). இவரிடம் ... மேலும் பார்க்க

திருநங்கைகள் சிறப்பு விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

திருநங்கைகள் தினத்தையொட்டி அவா்களின் நலனுக்காக சிறப்பான சேவை புரிந்த திருநங்கைகளுக்கான விருது பெற ா் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் த.பிரபுசங்கா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக... மேலும் பார்க்க

போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி

கொளத்தூா் வட்டார போக்குவரத்து துறையினா் நெடுஞ்சாலையிலேயே வாகன பரிசோதனை கள், ஆவண சரிபாா்ப்பு பணிகளில் ஈடுபட்டு வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். தமிழ்நாடு... மேலும் பார்க்க