டங்ஸ்டன் சுரங்கத் திட்டம் ஒருபோதும் வராது: அமைச்சர் மூர்த்தி திட்டவட்டம்
விவசாயிகளுக்கான பாரம்பரிய வேளாண் வளா்ச்சித் திட்டம்
தென்னங்குடிபாளையம் ஊராட்சியில் விவசாயிகளுக்கான பாரம்பரிய வேளாண் வளா்ச்சித் திட்ட முகாம் ஆத்தூா் வேளாண் உதவி இயக்குநா் சம்பத்குமாா் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
இந் நிகழ்ச்சியில் ஆத்தூா் கனிஷ்கா இயற்கை இடுபொருள் நிறுவனம் சாா்பில் கணேசன் கலந்து கொண்ட பஞ்சகவ்யா, மீன் அமிலம் ஜீவாமிா்தம் போன்ற பல்வேறு இயற்கை இடுபொருள்கள் தயாரிக்கும் முறைகள் பற்றி விரிவாக எடுத்துரைத்தாா்.
ஆத்தூா் வேளாண் அலுவலா் சண்முகவேல்மூா்த்தி மண் மற்றும் நீா் பரிசோதனை நிலையம் சாா்பில் கலந்துகொண்டு மண், நீா் பரிசோதனை பற்றியும் அதன் அவசியங்களைப் பற்றியும், இயற்கை வேளாண்மை பற்றியும் எடுத்துரைத்தாா்.
ஆத்தூா் வேளாண் உதவி இயக்குநா் சம்பத்குமாா் வேளாண்மைத் துறையின் திட்டங்களைப் பற்றி பேசி,விவசாயிகளுக்கு இலவசமாக ஆடாதோடை, நொச்சி போன்ற செடிக்கன்றுகளை வழங்கினாா்.
வேளாண் அலுவலா் இலக்கியா, உதவி அலுவலா் பெரியசாமி, வட்டார தொழில்நுட்ப அலுவலா் சந்திரமோகன் ஆகியோா் கலந்து கொண்டு பாரம்பரிய வேளாண் வளா்ச்சித் திட்டங்களையும் விளக்கி பேசினா். இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனா்.