செய்திகள் :

வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் சரிதான்: தலைமைத் தேர்தல் ஆணையர்

post image

நமது நிருபர்

வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டுகளை தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் செவ்வாய்க்கிழமை நிராகரித்தார்.

மேலும், முழுமையான ஆவணங்கள், கள சரிபார்ப்பு மற்றும் சம்பந்தப்பட்ட நபருக்கு கேட்க வாய்ப்பு வழங்காமல் எந்த பெயர் நீக்கமும் நடக்காது என்று அவர் கூறினார்.

தில்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அட்டவணையை அறிவிக்கும் வகையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் இதுகுறித்து தலைமைத் தேர்தல் ஆணையர் கூறியதாவது: வாக்காளர் பட்டியல் செயல்முறையின் ஒவ்வொரு படியும் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலில் வேரூன்றியுள்ளது.

கடுமையான நெறிமுறைகளைப் பின்பற்றாமல் பெயர்களை நீக்குவது சாத்தியமில்லை.

மேலும், ஒவ்வொரு கட்சிக்கும் பல்வேறு கட்டங்களில் ஆட்சேபணைகளை எழுப்ப உரிமை உண்டு. பூத் நிலை அதிகாரிகளின் (பிஎல்ஓ) முழுமையான சரிபார்ப்புக்குப் பிறகுதான் பெயர்கள் பட்டியலில் சேர்க்கப்படும்.

பூத் நிலை முகவர்களை நியமிக்க உரிமை உள்ள அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் வழக்கமான கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. உரிமைகோரல்கள் மற்றும் ஆட்சேபணைகளின் வாராந்திர பட்டியல்கள் பகிரப்படுகின்றன. மேலும், வரைவு மற்றும் இறுதிப் பட்டியல் இரண்டும் தேர்தல் ஆணையத்தின் வலைதளத்தில் வெளியிடப்படுகின்றன. வாக்குச்சாவடியை முடிவு செய்வது அனைத்துத் தரப்பினரின் ஆலோசனையுடன் மேற்கொள்ளப்படுகிறது.

தில்லுமுல்லு செய்ய முடியாது: மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் தில்லு முல்லு (ஹேக்) செய்ய முடியாது என்று நீதிமன்றங்கள் 42 சந்தர்ப்பங்களில் தீர்ப்பளித்துள்ளன. மேலும், மோசடி குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை. வாக்குப் பதிவு இயந்திரங்கள் சமரசம் செய்யப்பட்டு வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுவதில் உண்மையில்லை. மின்னணு வாக்குப் பதி வு இயந்திரங்கள் வாக்குப் பதிவு நாளுக்கு ஏழு முதல் எட்டு நாள்களுக்கு முன்பு மட்டுமே இயக்கப்படுகின்றன. மேலும், வேட்பாளர்களுக்கு ஒவ்வொரு நடவடிக்கையிலும் அவர்களின் முகவர்கள் மூலம் தகவல் தெரிவிக்கப்படுகிறது. மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை சேதப்படுத்துவது தொடர்பான குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை.

வாக்காளர்களின் வாக்குப் பதிவு சதவீத தரவை மாற்றுவது சாத்தியமற்றது. மேலும், மாலை 5 மணிக்குப் பிறகு வாக்குப் பதிவு அதிகரிப்பது குறித்து தவறான கருத்து பரப்பப்படுகிறது. தகவல்களை வெளிப்படுத்துவது எங்கள் முக்கியக் கடமையாகும். விரிவான வழிகாட்டுதல்கள் மற்றும் தரவுத் தொகுப்புகள் எங்கள் வலைதளத்தில் உள்ளன என்றார் தலைமைத் தேர்தல் ஆணையர்.

"இலவசங்களை வரையறுப்பது மிகக் கடினம்'

தேர்தல் பிரசாரங்களின்போது அரசியல் கட்சிகள் இலவசங்களை அறிவிப்பது குறித்து தலைமைத் தேர்தல் ஆணையரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது: இந்த விஷயம் நீதிமன்றத்தின் பரிசீலனையின்கீழ் உள்ளது. இலவசங்கள் தடை செய்யப்படவில்லை என்று நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. எனக்கு இலவசங்கள் என்று தோன்றுவது வேறு ஒருவருக்கு உரிமையாக இருக்கலாம். இலவசங்கள் என்றால் என்ன என்பதை வரையறுப்பது மிகவும் கடினம். அத்தகைய அறிவிப்புகள் வெளியிடப்பட்டாலும், மாநிலத்தின் நிதி ஆரோக்கியம் குறித்தும் மக்கள் அறிந்திருக்க வேண்டும்.

ஒரு மாநிலத்தின் நிதி ஆரோக்கியம் என்ன என்பதைப் பார்ப்பது அவசியமாகும். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கடன் விகிதம் என்ன? அந்த வாக்குறுதியின்பேரில் நீங்கள் எவ்வளவு கடன் வாங்குவீர்கள்? இந்த வாக்குறுதியின் நிதிச் செலவு எவ்வளவு? வருங்கால சந்ததியினரின் எதிர்காலத்தை நாம் அடமானம் வைக்க முடியாது. இது மிகவும் தீவிரமான பிரச்னையாகும்.எங்கள் செயல்திறன் எங்கள் வலைதளத்தில் உள்ளது. இந்த விஷயம் நீதிமன்றத்தின் விசாரணையில் இருப்பதால், எங்கள் கைகள் தற்போது கட்டப்பட்டுள்ளன என்றார் அவர்.

கவிஞர் பிரிதீஷ் நந்தி காலமானார்!

கவிஞர் பிரிதீஷ் நந்தி புதன்கிழமை(ஜன. 8) காலமானார். அவருக்கு வயது 73. கவிஞராக மட்டுமல்லாது எழுத்தாளர், ஓவியர், படத் தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு விளங்கியவர். நாடாளுமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்க... மேலும் பார்க்க

தீவிர சிகிச்சைப் பிரிவில் பிரசாந்த் கிஷோர்! உடல்நிலை மோசமடைந்துள்ளது: ஜன் சுராஜ் கட்சி

பாட்னா: பிகாரில் அரசுப் பணி முதல்நிலை தோ்வு வினாத்தாள் கசிந்த சா்ச்சையால், அம்மாநிலத்தில் மொத்தம் 5 லட்சம் போ் எழுதிய முதல்நிலைத் தோ்வை ரத்து செய்யக் கோரி போராட்டங்கள் நீடித்துவருகின்றன.‘ஜன் சுராஜ்... மேலும் பார்க்க

திருப்பதி: வைகுண்ட ஏகாதசி தரிசன டோக்கன் பெற கட்டுக்கடங்காத கூட்டம் - நெரிசலில் 4 பேர் பலி!

திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி டோக்கன்களைப் பெற பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் கூடியிருந்ததால் வரிசையில் காத்திருந்த பக்தர்கள் கூட்டத்தில் கடும் நெரிசல் ஏற்பட்டது.வைகுண்ட ஏகாதசி வெள்ளிக்கிழமை(ஜன. 1... மேலும் பார்க்க

மகள், மனைவி, உறவினரை கொன்ற பாதுகாவலர் கைது!

பெங்களூரு : பெங்களூரின் ஜலஹள்ளி கிராஸ் பகுதியில் பெற்ற மகளைக் கொன்ற பாதுகாவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.குற்றஞ்சாட்டப்பட்ட கங்கராஜு என்ற நபர் தனது வீட்டில் கொலை செய்துவிட்டு சம்பவ இடத்திலிருந்து தப்பித... மேலும் பார்க்க

ஸ்பேடெக்ஸ் விண்கலன்களை விண்வெளியில் ஒருங்கிணைக்கும் நிகழ்வு ஒத்திவைப்பு: இஸ்ரோ

‘ஸ்பேடெக்ஸ்’ திட்டத்தில் விண்வெளியில் விண்கலன்களை ஒருங்கிணைக்கும் ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதற்காக தலா 400 கிலோ எடை கொண்ட சேசா் மற்றும் டாா்கெட் எனும் 2 விண்கலன்களை இஸ்ரோ வழிகாட்டுதலின் கீழ... மேலும் பார்க்க

நவீன ஆந்திரத்தை உருவாக்குவதே நோக்கம்: பிரதமர் மோடி

நவீன ஆந்திரப் பிரதேசத்தை உருவாக்க தேசிய ஜனநாயகக் கூட்டணி உறுதியேற்றுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஆந்திரத்திற்குச் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அனக்காபள்ளி மாவட்டத்தில் ரூ. 6500 க... மேலும் பார்க்க