BB Tamil 8 Exclusive: சௌந்தர்யாவுடன் திருமணம் எப்போது? - மனம் திறக்கும் விஷ்ணு
முபாசா இந்தியாவில் ரூ.150 கோடி வசூல்!
முபாசா திரைப்படம் இந்தியளவில் ரூ.150 கோடி வரை வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தி லைன் கிங் (the lion king) திரைப்படம் 2019 இல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. உலகம் முழுக்க வசூலில் சாதனை நிகழ்த்திய தி ஜங்கிள் புக் படத்தை இயக்கிய ஜோன் ஃபவ்ரேதான் தி லயன் கிங் படத்தை இயக்கினார்.
லயன் கிங் படம் இந்தியாவில் ஆங்கிலம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு என நான்கு மொழிகளில் 2140 திரையரங்குகளில் வெளியாகி ரூ. 178 கோடி வசூலித்தது.
தற்போது ’முபாசா தி லயன் கிங்’ படத்துக்கு ஜெப் நாதன்சன் திரைக்கதையில் பெர்ரி ஜென்கின்ஸ் இயக்கியுள்ளார்.
இதையும் படிக்க: பல இயக்குநர்கள் இஷ்டத்துக்கு படப்பிடிப்பு நடத்துகிறார்கள்: ராஜீவ் மேனன்
இது, 2019 இல் வெளியான தி லயன் கிங் படத்துக்கு முன்பும் பின்பும் நடக்கும் கதைகளை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தின் தமிழ் பதிப்புக்கு நடிகர் அர்ஜுன் தாஸ், நாசர், ரோபோ சங்கர், சிங்கம் புலி உள்ளிட்டோர் குரல் கொடுத்திருந்தனர்.
தெலுங்கு பதிப்பில் முபாசா கதாபாத்திரத்துக்கு நடிகர் மகேஷ் பாபுவும் ஹிந்தியில் நடிகர் ஷாருக்கான் அவரது மகன்களான ஆர்யன் கான், ஆப்ராம் கான் ஆகியோருடன் இணைந்து டப்பிங் பேசியிருந்தார்.
இந்த நிலையில், இப்படம் உலகளவில் ரூ. 3500 கோடியையும் இந்தியாவில் ரூ. 150 கோடிக்கு அதிகமாகவும் வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.