செய்திகள் :

`சல்மான் கான் தான் இலக்கு; குறிதவறியதால் பாபா சித்திக்' - 4,500 பக்க குற்றப்பத்திரிகை கூறுவதென்ன?

post image

பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு குஜராத் சிறையில் இருக்கும் டெல்லியை சேர்ந்த மாஃபியா லாரன்ஸ் பிஷ்னோய் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வருகிறான். தொடர்ந்து பல முறை மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் கடந்த ஆண்டு தொடக்கத்தில் சல்மான் கான் வீட்டின் மீதும் லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டாளிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இச்சம்பவத்தையடுத்து சல்மான் கானை யாரும் நெருங்க முடியாத அளவுக்கு போலீஸார் பாதுகாப்பு போட்டுள்ளனர்.

இதையடுத்து சல்மான் கானுக்கு மிகவும் நெருக்கமான முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 12ம் தேதி இரவு மும்பை பாந்த்ராவில் உள்ள அவரது மகன் அலுவலகத்திற்கு வெளியில் மூன்று பேர் கொண்ட கும்பலால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இத்துப்பாக்கிச்சூட்டை நடத்திய இருவர் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டனர். துப்பாக்கியால் சுட்ட சிவ்குமார் கெளதம் தப்பிச்சென்றான். அவனை போலீஸார் பின்னர் தேடி கண்டுபிடித்து கைது செய்தனர்.

சல்மான் கான்

மூன்று பேரும் மும்பையில் உள்ள குர்லாவில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி இருந்து பாபா சித்திக்கை தொடர்ந்து கண்காணித்து இக்கொலையை செய்துள்ளனர் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர். இக்கொலையில் மொத்தம் 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது இவ்வழக்கில் போலீஸார் 85 நாட்கள் விசாரணை நடத்தி சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். மொத்தம் 4590 பக்கங்களை கொண்ட குற்றப்பத்திரிகையில் என்ன காரணத்திற்காக இக்கொலை நடந்தது என்பது குறித்து விரிவான தகவல்கள் இடம் பெற்று இருக்கிறது. குற்றப்பத்திரிக்கையில், நடிகர் சல்மான் கானை கொலை செய்வதுதான் குற்றவாளிகளின் பிரதான நோக்கமாக இருந்தது. ஆனால் சல்மான் கானுக்கு தொடர்ந்து பாதுகாப்பு அதிகமாக இருந்ததால் அவருக்கு நெருக்கமான பாபா சித்திக் பக்கம் தங்களது கவனத்தை திருப்பியுள்ளனர்.

பாபா சித்திக் சல்மான் கானுக்கு நெருக்கமானவர் மட்டுமல்லாது தாவூத் இப்ராகிமுடன் தொடர்பு கொண்டு இருப்பதாக கருதி அவரை கொலை செய்ய முடிவு செய்தனர். ஆரம்பத்தில் பாபா சித்திக் அல்லது அவரின் மகன் ஜீசான் சித்திக் ஆகிய இருவரில் ஒருவர் அல்லது இரண்டு பேரையும் விநாயகர் சதுர்த்தியன்று கொலை செய்ய திட்டமிட்டு இருந்தனர். ஆனால் விநாயகர் சதுர்த்தி விழாவின் போது சிலை கரைப்புக்கு இரண்டு பேரும் வராத காரணத்தால் அப்போது அவர்களது திட்டம் நிறைவேறவில்லை. அதன் பிறகுதான் கடந்த அக்டோபர் 12ம் தேதி இரவு தசராவையொட்டி துர்கா சிலை ஊர்வலம் நடந்து கொண்டிருந்தபோது அந்த சத்தத்தை பயன்படுத்தி கொலை செய்தனர். இக்கொலையில் 26 பேர் கைது செய்யப்பட்டுவிட்ட நிலையில் சிக்கந்தர், சுபம் லோன்கர், அன்மோல் பின்ஷோய் ஆகியோர் தலைமறைவாக இருக்கின்றனர்.

அன்மோல் பிஷ்னோய்

மும்பையில் ஆதிக்கம் செலுத்தவேண்டும் என்ற நோக்கத்திலும், மும்பையில் முக்கிய பிரமுகர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தவேண்டும் என்ற நோக்கத்திலும், மிரட்டி பணம் பறிப்பதை மும்பையில் விரிவுபடுத்தவேண்டும் என்ற நோக்கத்தில் இக்கொலையை செய்துள்ளனர். இதில் அன்மோல் பிஷ்னோய்தான் பிரதான குற்றவாளியாவான். ஆனால் இக்குற்றப்பத்திரிகையில் லாரன்ஸ் பிஷ்னோய் பெயர் இடம் பெறவில்லை. லாரன்ஸ் பிஷ்னோய் இக்கொலையில் தொடர்பு கொண்டிருந்ததற்கு எந்தவித ஆதாரமும் சிக்கவில்லை. சல்மான் கான் வீட்டின் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது தொடர்பாக கைது செய்யப்பட்ட அனுஜ் போலீஸ் காவலில் இறந்ததும் இக்கொலைக்கு முக்கிய காரணமாகும்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 35 மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இக்கொலைக்காக 17 லட்சம் ரூபாய் பல்வேறு வங்கிக்கணக்குகளுக்கு டிரான்ஸ்பர் செய்யப்பட்டுள்ளது. மும்பையில் குடிசை மேம்பாட்டுத் திட்டங்களை நிறைவேற்றுவதில் ஏற்பட்ட போட்டி காரணமாக இப்படுகொலை நடந்திருக்க வாய்ப்பு இல்லை என்று தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக பில்டர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது என்று குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அண்ணாமலை பாணியில் ஆம் ஆத்மி... பெல்டால் தன்னைத்தானே அடித்துக்கொண்ட குஜராத் தலைவர்; காரணம் என்ன?

குஜராத் மாநிலம் சூரத்தில் ஆம் ஆத்மி கட்சி சார்பாகப் போராட்ட பொதுக்கூட்டம் நடந்தது. அவதூறு வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்ட பெண்ணை காவல்துறையினர் ஊர்வலமாக அழைத்துச்சென்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து இக்கூட... மேலும் பார்க்க

`ஓட்டு போட்டீர்கள் என்பதற்காக நீங்கள் எனக்கு பாஸ் கிடையாது' - அஜித் பவார் பேச்சால் சர்ச்சை

மகாராஷ்டிரா மாநிலத்தில் துணை முதல்வராக இருக்கும் அஜித் பவார் தனது சொந்த ஊரான பாராமதி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். சரத் பவாரிடமிருந்து பிரிந்து சென்ற பிறகு முதல் முறையாக அஜித் பவார... மேலும் பார்க்க

Assam: காண்டாமிருகத்தைக் காணச் சென்றபோது விபரீதம்; வீடியோ வைரலானதால் விசாரணைக்கு மாநில அரசு உத்தரவு

அஸ்ஸாம் மாநிலம் காசிரங்கா வனவிலங்குகள் சரணாலயத்தில் காண்டாமிருகம் உட்பட ஏராளமான வனவிலங்குகள் இருக்கின்றன. இங்குத் தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்கள் பாதுகாப்பான ஜீப்க... மேலும் பார்க்க

Prashant Kishor: கிச்சன், படுக்கை, ஏ.சி-யுடன் கூடிய சொகுசு வேன்; பிரசாந்த் கிஷோர் உண்ணாவிரத சர்ச்சை!

அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் இப்போது பீகாரில் ஜன் சுராஜ் என்ற கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். பீகாரில் கடந்த மாதம் 13-ம் தேதி அரசு பணிகளுக்கான தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வில் முறைகேடு நடந்ததாக... மேலும் பார்க்க

"வழி தவறிய எருமை எந்த மாநிலத்துக்குச் சொந்தம்?" - கர்நாடகா, ஆந்திர எல்லையில் பதற்றம்; பின்னணி என்ன?

கர்நாடகா மற்றும் ஆந்திரா எல்லையில் இருக்கும் கிராமங்கள் பொம்மநஹால் மற்றும் மெதெஹல். இதில் மொம்மநஹால் கிராமம் கர்நாடகா மாநிலம் பெல்லாரி மாவட்டத்திற்குள் இருக்கிறது. இந்த இரண்டு கிராமத்திற்கு இடையே ஒரு ... மேலும் பார்க்க

Vikatan Weekly Quiz: DMK அமைச்சர் வீட்டில் ரெய்டு `டு' மோடி காஸ்ட்லி கிஃப்ட்; இந்த வார கேள்விகள்!

திமுக அமைச்சர் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு, அமெரிக்க அதிபரின் மனைவிக்கு பிரதமர் மோடி இந்தியா சார்பில் அளித்த விலையுயர்ந்த வைரம், டெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை என இந்த வாரத்தில் பல்வேறு முக்கி... மேலும் பார்க்க