Assam: காண்டாமிருகத்தைக் காணச் சென்றபோது விபரீதம்; வீடியோ வைரலானதால் விசாரணைக்கு மாநில அரசு உத்தரவு
அஸ்ஸாம் மாநிலம் காசிரங்கா வனவிலங்குகள் சரணாலயத்தில் காண்டாமிருகம் உட்பட ஏராளமான வனவிலங்குகள் இருக்கின்றன. இங்குத் தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்கள் பாதுகாப்பான ஜீப்களில் சென்று வனவிலங்குகளை நேரில் அருகில் சென்று பார்க்க முடிகிறது.
அவ்வகையில், அங்கு மூன்று ஜீப்களில் சுற்றுலாப் பயணிகள் விலங்குகளைப் பார்க்க் சென்று கொண்டிருந்தனர். மூன்று ஜீப்களிலும் சுற்றுலாப் பயணிகள் முழுமையாக இருந்தனர். அந்த ஜீப்களின் பின்புறம் காண்டாமிருகம் ஒன்று மெதுவாக நடந்து வந்து கொண்டிருந்தது. இரண்டு ஜீப் முன்னால் சென்றுவிட்டது. மூன்றாவது ஜீப்பிலிருந்த கதவு திடீரென திறந்துகொண்டது. அதிலிருந்து தாய், மகள் தவறி வெளியில் விழுந்துவிட்டனர். அவர்களை நோக்கி காண்டாமிருகம் வந்தது.
அதனைப் பார்த்து தாயும், மகளும் பயந்து போய் அழ ஆரம்பித்தனர். ஜீப்பிற்குள் இருப்பவர்களும் அதிர்ச்சியடைந்தனர். வெளியில் விழுந்தவர்களுக்கு என்ன ஆகுமோ என்ற பதட்டம் ஏற்பட்டது. அதற்குள் வெளியே விழுந்தவர்கள் அருகில் சென்ற ஜீப் கதவு திறக்கப்பட்டது. அதில் தாயும், மகளும் அவசர அவசரமாக ஏறிக்கொண்டனர். அதன் பிறகே இருவரும் நிம்மதி ஏற்பட்டது.
நடந்த சம்பவத்தை ஜீப்பிலிருந்த மற்றொரு பயணி தனது மொபைல் போதில் பதிவு செய்திருந்தார். அந்த காட்சி சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி இருக்கிறது. அதனைப் பார்த்த நெட்டிசன்கள், தாய், மகள் அதிர்ஷ்டவசமாகத் தப்பித்துவிட்டனர் என்றும், ஆனால் எதாவது நடந்திருந்தால் அதற்குக் காண்டாமிருகத்தைக் குறை சொல்வார்கள் என்றும் தெரிவித்துள்ளனர். ஜீப்பிலிருந்து தாய், மகள் வெளியில் விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்து விசாரணை நடத்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
விகடன் ஆடியோ புத்தகம்
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...