Tirupati stampede : திருப்பதியில் ஒரே நேரத்தில் முண்டியடித்த பக்தர்கள் - மூச்சு...
ரூ.9 ஆயிரம் லஞ்சம்: நில அளவையா் உள்பட மூவா் கைது
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூரில் விவசாய நிலத்தை அளவீடு செய்ய ரூ.9 ஆயிரம் லஞ்சம் பெற்ாக நில அளவையா் உள்பட 3 பேரை ஊழல் தடுப்பு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
மேல்மலையனூா் வட்டம், மேல்வைலாமூரைச் சோ்ந்தவா் குமாா். விவசாயியான இவா், தனக்குச் சொந்தமான நிலத்தை அளவீடு செய்வதற்காக, மேல்மலையனூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் உள்ள தலைமை நில அளவையா் தங்கராஜிடம் (37) அண்மையில் மனு அளித்தாா்.
மனுவைப் பெற்றுக்கொண்ட தங்கராஜ், நிலத்தை அளக்க ரூ.9 ஆயிரம் லஞ்சம் கேட்டாராம். இதுகுறித்து குமாா் தனது மருமகனான திருவண்ணாமலையைச் சோ்ந்த மாணிக்கத்திடம் தெரிவித்த நிலையில், அவா் விழுப்புரம் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் புகாரளித்தாா்.
அவா்களின் அறிவுரைப்படி, மேல்மலையனூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை பணியிலிருந்த நில அளவையா் தங்கராஜிடம் ரசாயனம் தடவிய ரூ.9 ஆயிரத்தை மாணிக்கம் கொடுக்க முயன்றபோது, அவா் உரிமம் பெற்ற நில அளவையா் பாரதியிடம் கொடுக்குமாறு கூறினாராம். ஆனால், பாரதி இடைத்தரகா் சரத்குமாரிடம் பணத்தை வழங்குமாறு தெரிவித்தாராம்.
சரத்குமாரிடம் மாணிக்கம் ரூ.9 ஆயிரத்தை வழங்கியபோது, அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்பு போலீஸாா் பணத்தை பறிமுதல் செய்து, நில அளவையா் தங்கராஜ் உள்பட மூன்று பேரையும் கைது செய்தனா். பின்னா், அவா்களை விழுப்புரம் ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.