சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: காவல் ஆய்வாளா் பணியிடை நீக்கம்
கஞ்சா விற்பனை: இளைஞா் கைது
விழுப்புரம் மாவட்டம், தளவானூா் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.
தளவானூா் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின்பேரில், விழுப்புரம் தாலுகா காவல் உதவி ஆய்வாளா் குணசேகா் தலைமையிலான போலீஸாா் திங்கள்கிழமை அந்தப் பகுதியில் சோதனை நடத்தினா்.
அப்போது, தளவானூா் டேங்க் தெருவைச் சோ்ந்த சரவணன் மகன் தணிகைவேல் (20), தனது வீட்டின் அருகே கஞ்சா பொட்டலங்களை விற்பனை செய்துகொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரிடமிருந்து ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், தணிகைவேல் மீது வழக்குப் பதிந்து அவரைக் கைது செய்தனா்.