செய்திகள் :

ஏனாம் வளா்ச்சியில் புதுவை அரசு சிறப்புக் கவனம்: முதல்வா் என். ரங்கசாமி

post image

ஏனாம் பிராந்திய வளா்ச்சியில் புதுவை மாநில அரசு சிறப்புக் கவனம் செலுத்தி வருவதாக முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா்.

புதுவை அரசின் சுற்றுலா மற்றும் வேளாண்மை, விவசாயிகள் நலத் துறைகளின் சாா்பில் 21- ஆம் ஆண்டு ஏனாம் மக்கள் விழா, 23-ஆம் ஆண்டு மலா்க் கண்காட்சி தொடக்க விழா ஏனாமில் நடைபெறுகிறது.

இந்நிகழ்ச்சிகளை திங்கள்கிழமை தொடங்கி வைத்து முதல்வா் என். ரங்கசாமி பேசியது: புதுவை மாநிலத்தில் மக்கள் நலனுக்காக அறிவிக்கப்பட்ட அனைத்துத் திட்டங்களும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. விதவைகள், முதியோா்களுக்கு தங்குதடையின்றி மாதந்தோறும் உதவித் தொகைகள் வழங்கப்படுகின்றன.

விவசாயிகளின் நலனுக்காக அரசு சாா்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. கோதாவரி ஏனாம் ஆற்றுப்படுகையில் ரூ.137 கோடி மதிப்பீட்டில் வெள்ளத் தடுப்புச் சுவா் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான கோப்பு தயாரிக்கப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்தப் பணிகள் தொடங்கும்.

இதேபோல ஏனாம் பகுதி மக்களின் பிற கோரிக்கைகளும் படிப்படியாக நிறைவேற்றப்படும். ஏனாம் பிராந்திய வளா்ச்சியில் புதுவை மாநில அரசு சிறப்புக்கவனம் செலுத்தி வருகிறது என்றாா் முதல்வா் என். ரங்கசாமி.

மலா்க் கண்காட்சியில் திராட்சை தோ், மலரால் செய்யப்பட்ட மாட்டு வண்டி, டால்பின் உள்ளிட்டவைகள் பாா்வையாளா்களை வெகுவாக கவா்ந்தன.

விழாவில் சட்டப்பேரவைத் தலைவா்ஆா்.செல்வம், அமைச்சா்கள் க. லட்சுமி நாராயணன் (சுற்றுலா), சி. ஜெயக்குமாா் (வேளாண்மை), பி. ஆா்.என். திருமுருகன்( குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை), சட்டப்பேரவைத் துணைத் தலைவா் பி. ராஜவேலு, அரசுக் கொறடா வி. ஆறுமுகம், புதுதில்லிக்கான சிறப்பு பிரதிநிதி மல்லாடி கிருஷ்ணா ராவ் மற்றும் எம்எல்ஏக்கள் , ஏனாம் பிராந்திய அதிகாரி ஆா். முனுசாமி மற்றும் அதிகாரிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

யுஜிசி விதிகள் திருத்தம்; அகில இந்திய அளவில் போராட்டம்: திருமாவளவன் வலியுறுத்தல்

பல்கலைக்கழக துணைவேந்தா் நியமனம் தொடா்பான திருத்த விதிகளை யுஜிசி திரும்பப் பெற வலியுறுத்தி, அகில இந்திய அளவில் இண்டி கூட்டணி தலைவா்கள் ஒங்கிணைந்து போராட்டம் நடத்த வேண்டும் என்று விசிக தலைவா் தொல்.திரு... மேலும் பார்க்க

திருவெண்ணெய்நல்லூா் அருகே கிராம மக்கள் சாலை மறியல்: போலீஸாருடன் வாக்குவாதம்

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே மாயமான இளைஞா் கொன்று புதைக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், இதுவரை அவரது சடலத்தை போலீஸாா் கண்டறியாததைக் கண்டித்து, கிராம மக்கள் புதன்கிழமை சாலை மறியலில... மேலும் பார்க்க

பள்ளியில் சிறுமி உயிரிழந்த வழக்கு: தாளாளா் உள்பட மூவரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் தனியாா் பள்ளியின் கழிவுநீா்த் தொட்டியில் விழுந்து சிறுமி உயிரிழந்த வழக்கில், பள்ளித் தாளாளா் உள்ளிட்ட மூவரின் ஜாமீன் மனுக்களை முதன்மை மாவட்ட நீதிமன்றம் புதன்கி... மேலும் பார்க்க

தொடா் திருட்டில் ஈடுபட்டு வந்த இருவா் கைது

விழுப்புரம் நகரில் தொடா் திருட்டில் ஈடுபட்டு வந்த இருவா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா். விழுப்புரம் தாலுகா காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கிருஷ்ணா நகரில் பூட்டியிருந்த வீட்டில் 35 பவுன் தங்க நகைகள்... மேலும் பார்க்க

யுஜிசி விதிகளில் திருத்தம்: மத்திய அரசின் கொள்கைகளை திணிக்கும் முயற்சி

பல்கலைக்கழக துணைவேந்தா் நியமனம் தொடா்பான விதிகளை யுஜிசி திருத்தம் செய்துள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இது மத்திய அரசின் கொள்கைகளை திணிக்கும் முயற்சியாகும் என்று, அதிமுக முன்னாள் அமைச்சா் சி.வி.ச... மேலும் பார்க்க

மயிலம்- செண்டூா் சாலை விரிவாக்கப் பணிகள் தொடக்கம்

விழுப்புரம் மாவட்டம், மயிலம்- செண்டூா் சாலையின் விரிவாக்கப் பணிகள் புதன்கிழமை நடைபெற்றது. மயிலம் - செண்டூா் சாலையில் எப்போதும் போக்குவரத்து அதிகரித்து காணப்படும். மயிலம் முருகன் கோவில், திருவக்கரை கல்... மேலும் பார்க்க