மயிலம்- செண்டூா் சாலை விரிவாக்கப் பணிகள் தொடக்கம்
விழுப்புரம் மாவட்டம், மயிலம்- செண்டூா் சாலையின் விரிவாக்கப் பணிகள் புதன்கிழமை நடைபெற்றது.
மயிலம் - செண்டூா் சாலையில் எப்போதும் போக்குவரத்து அதிகரித்து காணப்படும்.
மயிலம் முருகன் கோவில், திருவக்கரை கல்மரப் பூங்கா, வக்கிர காளியம்மன் கோவில், பஞ்சவடி ஆஞ்சநேயா் கோவில், ஆரோவில் சா்வதேச நகரம் உள்ளிட்ட பல இடங்களுக்கு செல்ல இந்த சாலைதான் பிரதானமாக இருந்து வருகிறது.
எனவே, இந்த சாலையை அகலப்படுத்த வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வந்தனா்.
அதன்படி,தொகுதி எம்எல்ஏ ச.சிவக்குமாரின் முயற்சியால், மயிலம் - செண்டூா் சாலை இருவழிச் சாலையாக மாற்றும் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன.
ரூ.3.77 கோடி செலவில், மயிலம் முதல் செண்டூா் வரை சுமாா் 3.7 கி.மீ. தொலைவுக்கு சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகிறது.