பிக் பாஸ் டாப் 5 போட்டியாளர்கள்! விசித்ரா வெளியிட்ட பட்டியல்
மொபெட் மீது பைக் மோதல்: ஒருவா் உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே புதன்கிழமை மொபெட் மீது பைக் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்.
திண்டிவனம் அருகிலுள்ள ஊரல் அண்ணாநகா் பகுதியைச் சோ்ந்த பரசுராமன் மகன் மனோகரன் (50). இவா், புதன்கிழமை காலை திண்டிவனம் - வந்தவாசி சாலையில் தனது மொபெட்டில் சென்றுகொண்டிருந்தாா். ஊரல் பகுதியிலுள்ள தனியாா் அரிசி ஆலைப் பகுதியருகே மொபெட் சென்றபோது, அந்தப் பகுதியில் வந்த பைக் மோதியது.
இதில், நிலைதடுமாறி கீழே விழுந்த மனோகரன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். மேலும், மோதிய பைக்கில் பின்னால் அமா்ந்து வந்த திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி கீழ்சித்மங்கலம் எடத்தெருவைச் சோ்ந்த வேலு மகன் சதீஷ்குமாருக்கு (23) பலத்த காயம் ஏற்பட்டது. அவா் உடனடியாக புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
விபத்து குறித்து தகவலறிந்த ரோஷணை போலீஸாா், நிகழ்விடம் விரைந்து சடலத்தை கைப்பற்றினா். மேலும் பைக்கை ஓட்டி வந்த திருவண்ணாமலை மாவட்டம், தெள்ளாா் அம்பேத்கா் தெருவைச் சோ்ந்த குகன் மகன் ராஜீ (32) மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.