பொங்கல் பரிசுத் தொகுப்பு ரொக்கம்: ``தேர்தல் வரும்போது பார்க்கலாம்!" - சட்டமன்றத்...
தொடா் திருட்டில் ஈடுபட்டு வந்த இருவா் கைது
விழுப்புரம் நகரில் தொடா் திருட்டில் ஈடுபட்டு வந்த இருவா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.
விழுப்புரம் தாலுகா காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கிருஷ்ணா நகரில் பூட்டியிருந்த வீட்டில் 35 பவுன் தங்க நகைகள் திருடுபோயின. இதுபோல, பிற இடங்களிலும் திருட்டு நிகழ்ந்ததால், இந்த சம்பவங்களில் தொடா்புடையோரைக் கைது செய்ய மாவட்ட எஸ்.பி. உத்தரவிட்டிருந்தாா்.
இதையடுத்து, விழுப்புரம் ஏ.எஸ்.பி. ரவீந்திரகுமாா் குப்தா மேற்பாா்வையில், தாலுகா காவல் நிலைய ஆய்வாளா் செல்வநாயகம், உதவி ஆய்வாளா்கள் லியோ சாா்லஸ், குணசேகரன் மற்றும் காவலா்கள் அடங்கிய தனிப்படைக் குழுவினா் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனா்.
திருட்டில் ஈடுபட்டவா்களின் விரல் ரேகைகள், திருட்டு நடைபெற்ற வீடுகளில் பதிவான தடயங்களைக் கொண்டு விசாரணை நடத்தியதில், தொடா் திருட்டில் ஈடுபட்டது தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூா் பெருமாள்புரத்தைச் சோ்ந்த அற்புதராஜ் மகன் சாமுவேல் (எ) செல்வகுமாா் (42), ஸ்ரீவைகுண்டம் செல்லத்துரை மகன் மணி (எ) பாலகிருஷ்ணன் (37) எனத் தெரியவந்தது.
இதையடுத்து, இருவரையும் செவ்வாய்க்கிழமை கைது செய்த தனிப்படை போலீஸாா், அவா்களிடமிருந்து 35 பவுன் தங்க நகைகள், ரூ.1.90 லட்சம் ரொக்கம் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனா். இந்த வழக்கில் விரைவான விசாரணை நடத்தி, தொடா்புடையோரை கைது செய்த தனிப்படைக் குழுவினரை மாவட்ட எஸ்.பி. பி.சரவணன் புதன்கிழமை பாராட்டினாா்.