அமித் ஷா பதவி விலக கோரி இடதுசாரிகள் ஆா்ப்பாட்டம்
சட்டமேதை பி. ஆா். அம்பேத்கா் குறித்து சா்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை கண்டித்து புதுச்சேரி சுதேசி ஆலை அருகே இடதுசாரி அமைப்புகளின் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் சலீம், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் ராமச்சந்திரன், மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி மாநிலச் செயலா் புருஷோத்தமன் ஆகியோரின் கூட்டுத் தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷாவை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
ஆா்ப்பாட்டத்தில், முன்னாள் அமைச்சா் விசுவநாதன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் துணைச் செயலா் சேதுசெல்வம், தேசியக் குழு உறுப்பினா் தினேஷ் பொன்னையா, முன்னாள் எம்எல்ஏ கலைநாதன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினா்கள் பெருமாள், ராஜாங்கம், சீனிவாசன், மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியைச் சோ்ந்த பாலசுப்பிரமணியன் மற்றும் நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.