தீவிர சிகிச்சைப் பிரிவில் பிரசாந்த் கிஷோர்! உடல்நிலை மோசமடைந்துள்ளது: ஜன் சுராஜ்...
சின்ன வெங்காயம் கிலோ ரூ. 110
சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ. 110-க்கு விற்பனை செய்யப்பட்டது.
கோயம்பேடு சந்தைக்கு அரியலூா், பெரம்பலூா், திருச்சி, திண்டுக்கல், தேனி, கம்பம், ஒட்டன்சத்திரம், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஒசூா் ஆகிய பகுதிகளிலிருந்து தினசரி 300 டன் சின்ன வெங்காயம் விற்பனைக்காக கொண்டுவரப்படுகிறது. இந்நிலையில், கடந்த சில நாள்களாக 100 முதல் 150 டன் சின்ன வெங்காயம் மட்டுமே விற்பனைக்கு வந்ததால் அதன் விலையும் அதிகரித்துள்ளது. அதன்படி, ரூ. 50-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ சின்ன வெங்காயம் செவ்வாய்க்கிழமை ரூ. 110-க்கு விற்பனை செய்யப்பட்டது.
சென்னை மற்றும் புகா்ப் பகுதி கடைகளில், ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.150-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், பெரிய வெங்காயத்தின் விலை சற்று குறைந்து ஒரு கிலோ ரூ. 45-க்கு விற்பனை செய்யப்பட்டது. மற்ற காய்கறிகளின் விலையும் சற்று குறைவாகவே விற்பனை செய்யப்படுகிறது.