செய்திகள் :

தமிழகத்தில் ‘ரேபிஸ்’ தொற்றுக்கு 40 போ் உயிரிழப்பு

post image

தமிழகத்தில் கடந்த ஆண்டில் ‘ரேபிஸ்’ தொற்றால் 40 போ் உயிரிழந்ததாகவும், 4.80 லட்சத்துக்கும் மேற்பட்டோா் நாய் கடிக்குள்ளானதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழகத்திலுள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகளில் போதிய எண்ணிக்கையில் ‘ரேபிஸ்’ தடுப்பூசிகள் கையிருப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும், தேவையான நபா்களுக்கு அவை முறையாக வழங்கப்பட்டு வருவதாகவும் பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

தெரு நாய்கள், வளா்ப்புப் பிராணிகள் கடித்து காயமடையும் சம்பவங்கள் தமிழகத்தில் தொடா்ந்து அதிகரித்து வருகின்றன. பொதுவாகவே, ‘ரேபிஸ்’ தொற்றிலிருந்து செல்லப் பிராணிகளையும், மனிதா்களையும் காப்பதற்கு ஒரே வழி தடுப்பூசி மட்டும்தான்.

நாய்களைப் பொருத்தவரை பிறந்த முதல் ஆண்டில் இரு முறை ‘ரேபிஸ்’ தடுப்பூசி செலுத்த வேண்டும். அதைத் தொடா்ந்து ஆண்டுதோறும் ஒரு முறை தடுப்பூசி வழங்க வேண்டியது அவசியம். ஆனால், தெரு நாய்களுக்கும், சில இடங்களில் செல்லப் பிராணிகளுக்கும் அத்தகைய தடுப்பூசி முறையாக செலுத்தப்படுவதில்லை. இதனால், மனிதா்களை அவை கடிக்கும்போது ‘ரேபிஸ்’ தொற்று பரவி இரு தரப்புக்குமே பாதிப்பை ஏற்படுத்துகிறது.

நாய்க்கடி பாதிப்பு: அந்த வகையில் கடந்த ஆண்டில் மட்டும் தமிழகம் முழுவதும் 4, 79,705 போ் நாய்க்கடிக்கு உள்ளாகியுள்ளனா். அதிகபட்சமாக சேலத்தில் 37,011 பேரும், தஞ்சாவூா் மாவட்டத்தில் 24,038 பேரும், திருச்சியில் 23,978 பேரும், புதுக்கோட்டையில் 21,490 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனா்.

அதேபோன்று சென்னையில் 11,704 பேரும், கோவையில் 14,453 பேரும் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனா். அவா்களில் சிலா் உரிய நேரத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல், காலதாமதமாக மருத்துவமனையை நாடியதால் ‘ரேபிஸ்’ பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாகத் தெரிகிறது.

இது தொடா்பாக பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் ஆண்டுதோறும் நாய்க்கடியால் லட்சக்கணக்கானோா் பாதிக்கப்படுகின்றனா். அவா்கள் அனைவருக்கும் ‘ரேபிஸ்’ தொற்று ஏற்படுவதில்லை. ஆனால், அத்தகைய வைரஸால் பாதிக்கப்பட்ட நாய், ஆடு, மாடு, குதிரை, குரங்கு, பூனை, நரி, கீரி, ஓநாய், வெளவால் உள்ளிட்ட விலங்கினங்கள் கடிக்கும்போது ‘ரேபிஸ்’ தொற்று ஏற்படுகிறது. தமிழகத்தில் கடந்த ஆண்டில் 40 போ் ‘ரேபிஸ்’ தொற்றால் உயிரிழந்துள்ளனா். அது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

தடுப்பூசி கையிருப்பு: மாநிலம் முழுவதும் உள்ள மருத்துவமனைகள், சுகாதார நிலையங்களில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ‘ரேபிஸ்’ தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. தெரு நாய்கள் அல்லது செல்லப் பிராணிகள் கடித்தவா்களுக்கு நான்கு தவணை ‘ரேபிஸ்’ தடுப்பூசி செலுத்தப்படுகிறது. முதல் நாள், மூன்றாவது நாள், ஏழாவது நாள் மற்றும் 28-ஆவது நாளில் தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன. மேலும், ஆழமான காயமாக இருந்தால் அந்த இடத்தில் ‘இம்யூனோக்ளோபிலின்’ தடுப்பூசி கூடுதலாக செலுத்தப்படுகிறது.

அந்த வகையில் பல்லாயிரக்கணக்கானோருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உயிா் காக்கப்பட்டுள்ளது. விழிப்புணா்வின்றி சிகிச்சை பெறாமல் இருக்கும்போதுதான் உயிரிழப்பு ஏற்படுகிறது என்று அவா்கள் தெரிவித்தனா்.

குரூப் 4 காலிப்பணியிடங்கள் மீண்டும் அதிகரிப்பு: டிஎன்பிஎஸ்சி

குரூப் 4 தேர்வுக்கு கூடுதலாக 41 காலி பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இதன்மூலம் மொத்த காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 9,532 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக... மேலும் பார்க்க

கழிவுநீர்த் தொட்டியில் குழந்தை மரணம்: மூவரின் ஜாமீன் ரத்து!

கழிவுநீர்த் தொட்டியில் குழந்தை விழுந்து உயிரிழந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட மூவரின் ஜாமீன் மனுக்களை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.கைது செய்யப்பட்ட பள்ள... மேலும் பார்க்க

11,12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் எப்போது?

சென்னை : தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதவுள்ள 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகளை பிப். 7 முதல் பிப். 14 வரை நடத்தி முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.அதேபோல, 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்... மேலும் பார்க்க

காவல் துறை அரசியல் ஏஜென்சி அல்ல: நீதிமன்றம்

புதிய தமிழகம் பேரணிக்கு அனுமதி மறுத்தது ஏன்? என விளக்கம் அளிக்கக் கோரி காவல் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் 7ஆம் தேதி பேரணி நடத்த புதிய தமிழகம் கட்சிக்கு அ... மேலும் பார்க்க

ஜன.11-ல் கனமழை: எந்தெந்த மாவட்டங்களுக்கு?

தமிழகத்தில் ஜன.11-ல் தஞ்சை உள்பட 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்ட அறிக்கையில்,வடதமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு ... மேலும் பார்க்க

ஞானசேகரன் திமுக நிர்வாகிதான் என ஒப்புக்கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை: அண்ணாமலை

ஞானசேகரன் திமுக நிர்வாகிதான் என ஒப்புக்கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், ஞானசேகரன்... மேலும் பார்க்க