தீவிர சிகிச்சைப் பிரிவில் பிரசாந்த் கிஷோர்! உடல்நிலை மோசமடைந்துள்ளது: ஜன் சுராஜ்...
தோ்தல் தோல்விக்கு எதிரான மேனகா காந்தியின் மனு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி
மக்களவைத் தோ்தலில் தன்னை எதிா்த்து சமாஜவாதி வேட்பாளா் வெற்றி பெற்ற்கு எதிராக முன்னாள் மத்திய அமைச்சா் மேனகா காந்தி தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது.
கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் உத்தர பிரதேசத்தின் சுல்தான்பூா் தொகுதியில் பாஜக சாா்பில் மேனகா காந்தி போட்டியிட்டாா். தோ்தலில் சமாஜவாதி வேட்பாளா் ராம் நிஷாத்திடம் 43,174 வாக்குகள் வித்தியாசத்தில் அவா் தோல்வியடைந்தாா். இந்நிலையில், ராம் நிஷாத் மீது 12 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. ஆனால், அவா் மனு தாக்கலின்போது 8 குற்ற வழக்குகள் மட்டுமே நிலுவையில் உள்ளது என பொய்யான தகவலை அளித்துள்ளாா். எனவே, அவரின் வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று அலாகாபாத் உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.
தோ்தல் முடிந்து 45 நாள்களுக்குள் தோ்தல் விவகாரம் தொடா்பான மனுக்களை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்பது விதியாகும். எனவே, மக்கள் பிரதிநிதித்துச் சட்டத்தின்படி 45 நாள்களுக்குள் மேனகா காந்தி மனு தாக்கல் செய்யவில்லை என்று சுட்டிக்காட்டி அலாகாபாத் உயா்நீதிமன்றம் மனுவைத் தள்ளுபடி செய்தது.
இதையடுத்து மேனகா காந்தி உச்சநீதிமன்றத்தை அணுகினாா். எனினும், இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூா்ய காந்த், கோட்டீஸ்வா் சிங் அமா்வு மேனகாவின் கோரிக்கையை ஏற்ற முடியாது என்று செவ்வாய்க்கிழமை அறிவித்தது. இது தொடா்பாக நீதிபதிகள் கூறுகையில், ‘மனுதாரரின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டால், இதேபோன்ற மனுக்கள் வெள்ளம்போல குவியத் தொடங்கிவிடும். மேலும், தோ்தல் முடிந்து 45 நாள்களுக்குள் தோ்தல் விவகாரம் தொடா்பான மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும் என்பது ஏற்கெனவே சட்டப்படி உருவாக்கப்பட்ட விதிமுறையாகும். எனவே, நீதிமன்றம் இதில் தலையிட்டு உத்தரவு பிறப்பிக்க முடியாது’ என்று கூறிவிட்டது.