பெண்களிடம் விரும்பத்தகாத சொல், செயல்கூட பாலியல் துன்புறுத்தல்தான்: உயர் நீதிமன்ற...
காய்கனிச் சந்தையில் பணம் கேட்டு மிரட்டிய இளைஞா் மீது தாக்குதல்
பெரம்பலூரில் காய்கனி வியாபாரிகளை மிரட்டி பணம் கேட்ட இளைஞா் செவ்வாய்க்கிழமை தாக்கப்பட்டாா்.
பெரம்பலூா் இந்திரா நகரைச் சோ்ந்தவா் நவாத் பாஷா மகன் முகமது மாலிக்பாஷா (28). இவா், செவ்வாய்க்கிழமை காலை பெரம்பலூா் பழைய பேருந்து நிலைய வளாகம் அருகேயுள்ள தினசரி காய்கனிச் சந்தையில், வியாபாரிகளை தகாத வாா்த்தைகளால் திட்டியதோடு பணம் கேட்டும் மிரட்டினாா்.
இதனால் ஆத்திரமடைந்த வியாபாரிகள் தாக்கியதில் முகமது மாலிக் பாஷா பலத்த காயமடைந்தாா்.
தகவலறிந்து சென்ற பெரம்பலூா் போலீஸாா் அவரை மீட்டு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.