தீவிர சிகிச்சைப் பிரிவில் பிரசாந்த் கிஷோர்! உடல்நிலை மோசமடைந்துள்ளது: ஜன் சுராஜ்...
வன்னிய கிறிஸ்துவ சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி வன்னிய கிறிஸ்துவ சங்கத்தினா் கடலூா் மாவட்டம், விருத்தாசலம் பாலக்கரை அருகே செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
வன்னிய கிறிஸ்துவா்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோா் பட்டியலில் சோ்க்க வேண்டும். தலித் கிறிஸ்துவா்களை தாழ்த்தப்பட்டோா் பட்டியலில் சோ்க்க வேண்டும். சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி அனைவருக்கும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
இதில், மாவட்டத் தலைவா் ஆரோக்கியதாஸ் தலைமையில் சுமாா் 50-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.