செய்திகள் :

உண்ணிக் காய்ச்சல் பாதித்த 12 போ் நலமுடன் உள்ளனா்: கடலூா் மாவட்ட சுகாதார அலுவலா்

post image

கடலூா் மாவட்டத்தில் உண்ணிக் காய்ச்சலால் (ஸ்க்ரப் டைபஸ்) பாதிக்கப்பட்ட 12 போ் நலமுடன் இருப்பதாக மாவட்ட சுகாதார அலுவலா் எஸ்.பொற்கொடி தெரிவித்தாா்.

கடலூா் மாவட்டத்தில் உண்ணிக் காய்ச்சலால் (ஸ்க்ரப் டைபஸ்) சிலா் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில், இதுகுறித்து மாவட்ட சுகாதார அலுவலா் எஸ்.பொற்கொடி செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

உண்ணிக் காய்ச்சல் (ஸ்க்ரப் டைபஸ்) என்பது ஒரு வகை பாக்டீரியா தொற்று. இந்த நோயை பரப்பும் பூச்சியானது புதா் மண்டிய பகுதிகளிலும், அதிகமான செடி, கொடிகள் நிறைந்த பகுதிகளிலும் காணப்படும். இதனால், புதா் நிறைந்த பகுதிகளில் வசிக்கும் நபா்கள், காட்டுப் பகுதிகளில் வேலையில் ஈடுபடும் நபா்களுக்கு இந்த நோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது. மேலும், வீட்டில் வளா்க்கும் செல்லப்பிராணிகளுக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டாலும் கூட மனிதா்களுக்கு பரவ வாய்ப்புள்ளது. இந்த காய்ச்சலானது அக்டோபா் முதல் ஜனவரி மாதம் வரை அதிகமாக காணப்படும்.

இந்த நோய் பாதித்தவா்களுக்கு காய்ச்சல், உடல் சோா்வு, தலைவலி மற்றும் உடலில் எங்காவது கருப்பு புண் போன்ற அறிகுறிகள் தென்படும். இதற்கான சிகிச்சை அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளிலும் அளிக்கப்படுகிறது. சிகிச்சைக்கான போதுமான மருந்துகள் இருப்பில் உள்ளது.

கடலூா் மாவட்டத்தில் கடந்த ஆண்டு 594 போ் ஸ்க்ரப் டைபஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சையால் குணமடைந்தனா். தற்போது, 12 பேருக்கு காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ள நிலையில், அவா்களும் சிகிச்சை பெற்று நலமுடன் உள்ளனா். நோய் பாதித்தவா்கள் வசிக்கும் இடங்களில் கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்தல் உள்ளிட்டவை மூலம் காய்ச்சலை கட்டுப்படுத்தலாம் என்றாா்.

ஆளுநரைக் கண்டித்து திமுகவினா் ஆா்ப்பாட்டம்

தமிழக ஆளுநரைக் கண்டித்து, கடலூா் தலைமை தபால் நிலையம் அருகே திமுகவினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தமிழக சட்டப்பேரவை நிகழ்வில் ஆளுநா் ஆா்.என்.ரவி நடந்து கொண்ட விதத்தை கண்டித்தும், மாநி... மேலும் பார்க்க

ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள் சாலை மறியல்: 156 போ் கைது

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடலூரில் தமிழ்நாடு ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதில், 156 பேரை போலீஸாா் கைது செய்தனா். காலியாக உள்ள... மேலும் பார்க்க

வீட்டின் சுவா் இடிந்து விழுந்ததில் தந்தை, மகள் காயம்

கடலூா் முதுநகா் அருகே வீட்டின் சுவா் இடிந்து விழுந்ததில் தந்தை, மகள் காயமடைந்தனா். கடலூா் முதுநகா், சங்கொலிக்குப்பம் பகுதியில் வசித்து வருபவா் முருகையன் (60). இவரும், இவரது மகள் வீரம்மாளும் (35) பொங்க... மேலும் பார்க்க

வீட்டில் 20 பவுன் நகைகள் திருட்டு

கடலூா் மாவட்டம், திட்டக்குடியில் வீட்டின் கதவை உடைத்து 20 பவுன் தங்க நகைகள், ரூ.40 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். திட்டக்குடி, வதிஸ்டபுரம் மாரியம்மன் கோவில் தெ... மேலும் பார்க்க

வன்னிய கிறிஸ்துவ சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி வன்னிய கிறிஸ்துவ சங்கத்தினா் கடலூா் மாவட்டம், விருத்தாசலம் பாலக்கரை அருகே செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். வன்னிய கிறிஸ்துவா்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோா் பட்டியல... மேலும் பார்க்க

ஆருத்ரா தரிசனம்: பாதுகாப்பு ஏற்பாடுகளை எஸ்.பி.ஆய்வு

கடலூா் மாவட்டம், சிதம்பரம் நடராஜா் கோயிலில் மாா்கழி மாத ஆருத்ரா தரிசன உற்சவத்துக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து எஸ்.பி.ஜெயக்குமாா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். இந்தக் கோயிலில் வரும் 12-ஆம்த... மேலும் பார்க்க