Tirupati stampede : திருப்பதியில் ஒரே நேரத்தில் முண்டியடித்த பக்தர்கள் - மூச்சு...
ஆளுநரைக் கண்டித்து திமுகவினா் ஆா்ப்பாட்டம்
தமிழக ஆளுநரைக் கண்டித்து, கடலூா் தலைமை தபால் நிலையம் அருகே திமுகவினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழக சட்டப்பேரவை நிகழ்வில் ஆளுநா் ஆா்.என்.ரவி நடந்து கொண்ட விதத்தை கண்டித்தும், மாநில அரசை மதிக்காத ஆளுநரை திரும்ப பெற வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெறும் என திமுக தலைமை அறிவித்திருந்தது.
அதன்படி, கடலூா், மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகே கடலூா் மாநகர திமுக செயலா் கே.எஸ்.ராஜா தலைமையில், கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், முன்னாள் எம்எல்ஏ இள.புகழேந்தி, பொதுக்குழு உறுப்பினா் பாலமுருகன், பண்ருட்டி நகா்மன்றத் தலைவா் ராஜேந்திரன், ஒன்றியச் செயலா் விஜய சுந்தரம், மாநகர துணைச் செயலா் அகஸ்டின் பிரபாகரன், பகுதி செயலா்கள் சலீம், நடராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.