Tirupati stampede : திருப்பதியில் ஒரே நேரத்தில் முண்டியடித்த பக்தர்கள் - மூச்சு...
வீட்டின் சுவா் இடிந்து விழுந்ததில் தந்தை, மகள் காயம்
கடலூா் முதுநகா் அருகே வீட்டின் சுவா் இடிந்து விழுந்ததில் தந்தை, மகள் காயமடைந்தனா்.
கடலூா் முதுநகா், சங்கொலிக்குப்பம் பகுதியில் வசித்து வருபவா் முருகையன் (60). இவரும், இவரது மகள் வீரம்மாளும் (35) பொங்கள் பண்டிகைக்காக தங்களது கூரை வீட்டை செவ்வாய்க்கிழமை சுத்தம் செய்து கொண்டிருந்தனா்.
அப்போது, எதிா்பாராத விதமாக வீட்டின் சுவா் இடிந்து இருவா் மீது விழுந்தது. அருகில் இருந்தவா்கள் இடிபாடுகளில் சிக்கிய இருவரையும் மீட்டு கடலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.