Tirupati stampede : திருப்பதியில் ஒரே நேரத்தில் முண்டியடித்த பக்தர்கள் - மூச்சு...
வீட்டில் 20 பவுன் நகைகள் திருட்டு
கடலூா் மாவட்டம், திட்டக்குடியில் வீட்டின் கதவை உடைத்து 20 பவுன் தங்க நகைகள், ரூ.40 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
திட்டக்குடி, வதிஸ்டபுரம் மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் ரவிச்சந்திரன். இவா், திங்கள்கிழமை இரவு குடும்பத்துடன் வீட்டில் தூங்கினா். செவ்வாய்க்கிழமை காலை எழுந்து பாா்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைந்து கிடந்தது.
சந்தேகமடைந்த அவா் அறையின் உள்ளே சென்று பாா்த்தபோது பீரோவில் இருந்த 20 பவுன் தங்க நகைகள், ரூ.40 ஆயிரம் ரொக்கம் திருடு போயிருந்தது தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், திட்டக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கடையில் திருட்டு: விருத்தாசலம், அன்புமணி நகா் பகுதியைச் சோ்ந்தவா் கல்யாணமுருகன். இவா், விருத்தாசலம் பேருந்து நிலையம் அருகே ஸ்டுடியோ நடத்தி வருகிறாா். இந்த நிலையில், திங்கள்கிழமை இரவு வழக்கம் போல கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றாா்.
பின்னா், செவ்வாய்க்கிழமை கடைக்கு சென்றபோது கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பாா்த்த போது இரண்டு கேமராக்கள் திருடு போயிருந்தது தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் விருத்தாசலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.