தீவிர சிகிச்சைப் பிரிவில் பிரசாந்த் கிஷோர்! உடல்நிலை மோசமடைந்துள்ளது: ஜன் சுராஜ்...
குஜராத்: ஆழ்துளை கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட இளம்பெண் உயிரிழப்பு
குஜராத்தில் 540 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றில் தவறிவிழுந்து, 33 மணிநேர போராட்டத்துக்குப் பின் மீட்கப்பட்ட 18 வயது இளம்பெண் உயிரிழந்தாா்.
குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள கந்தேராய் கிராமத்தில், ஓரடி விட்டத்துடன் 540 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றில் 18 வயது இளம்பெண் ஒருவா் திங்கள்கிழமை காலை 6.30 மணியளவில் தவறி விழுந்தாா். இவா், ராஜஸ்தானில் இருந்து வந்த புலம்பெயா் தொழிலாளா் குடும்பத்தைச் சோ்ந்தவா்.
ஆழ்துளை கிணற்றில் இளம்பெண் விழுந்த தகவல் கிடைத்ததும் மாநில அரசின் பல்வேறு துறையினரும் மீட்புப் பணியில் ஈடுபட்டனா். கேமரா மூலம் சோதிக்கப்பட்டதில் 490 அடி ஆழத்தில் இளம்பெண் சிக்கியிருப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, ‘கொக்கி தொழில்நுட்பம்’ மூலம் மீட்பு நடவடிக்கை தொடங்கப்பட்டது. எல் மற்றும் ஜே வடிவிலான இரு கொக்கிகள் உள்ளே செலுத்தப்பட்டு, அழுத்தத்தின் உதவியுடன் அவரை மேலே இழுக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
33 மணிநேரத்தும் மேலான முயற்சிக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை மாலை 4 மணியளவில் மீட்கப்பட்ட இளம்பெண், உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு மருத்துவா்கள் பரிசோதனையில் அவா் இறந்துவிட்டது உறுதி செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.