இந்தியாவில் எச்எம்பிவி பாதிப்பு 7 ஆக அதிகரிப்பு! அச்சப்பட வேண்டாம்-நட்டா
ஜல்லிக்கட்டு: நாளை(ஜன.6) முன்பதிவு தொடக்கம்
மதுரை ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொள்ள உள்ள காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு நாளை (06.01.25) முதல் தொடங்க உள்ளது.
தமிழ்நாட்டில் பொங்கல் திருநாளை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடத்துவது தமிழரின் பாரம்பரிய வீர விளையாட்டுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, வடமாடு, எருதுவிடும் விழா என்று நான்கு முறைகளில் பல்வேறு கிராமங்களில் ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது.
ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளுக்கோ, மாடுபிடி வீரா்களுக்கோ, பாா்வையாளா்களுக்கோ பாதிப்பு ஏற்படாத வகையில் அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைக்கு உள்பட்டு விழாக்கள் நடைபெற்று வருகிறது. தமிழக அரசின் அனுமதியின்றி எந்த இடத்திலும் ஜல்லிக்கட்டு, எருதாட்டம், மஞ்சுவிரட்டு போன்ற நிகழ்ச்சியை நடத்தக் கூடாது.
பல்லாவரம் - திரிசூலம் இடையே நடுவழியில் நிறுத்தப்பட்ட மின்சார ரயில்
அதேபோன்று, ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளும் காளைகளுக்கு வலியோ, துன்புறுத்தலோ ஏற்படுத்தக் கூடாது. இந்த நிலையில் மதுரை ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொள்ள உள்ள காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு நாளை (06.01.25) முதல் தொடங்க உள்ளது.
இதுகுறித்து மதுரை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளவுள்ள மாடுபிடி வீரர்கள் மற்றும் கலந்து கொள்ளும் மாடுகளுக்கான பதிவுகளை madurai.nic.in இணையதளம் மூலம் ஜன 6ஆம் தேதி மாலை 05.00 முதல் ஜன 7ஆம் தேதி மாலை 05.00 மணிக்குள் பதிவு செய்ய வேண்டும்.
பதிவு செய்தவர்களின் சான்றுகள் சரிபார்க்கப்பட்டபின் தகுதியான நபர்களுக்கு மட்டுமே டோக்கன் பதிவிறக்கம் செய்ய இயலும். டோக்கன் பதிவிறக்கம் செய்த நபர்கள் மட்டுமே ஜல்லிக்கட்டு போட்டில் பங்கேற்க அனுமதி அளிக்கப்படும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.