செய்திகள் :

பல இயக்குநர்கள் இஷ்டத்துக்கு படப்பிடிப்பு நடத்துகிறார்கள்: ராஜீவ் மேனன்

post image

ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன் அதிக நாள்கள் படப்பிடிப்பு செய்யும் இயக்குநர்களைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இந்தியளவில் முன்னணி ஒளிப்பதிவாளராக அறியப்பட்டவர் ராஜீவ் மேனன். ’மின்சார கனவு’, ‘கண்டுகொண்டேன், கண்டுகொண்டேன்’, ‘சர்வம் தாளமயம்’ உள்ளிட்ட படங்களையும் இயக்கியுள்ளார்.

இவர் இயக்குநர் வெற்றி மாறன் இயக்கிய விடுதலை திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அக்கதாபாத்திரம் கவனிக்கும்படியாகவும் அமைந்திருந்தது.

இதையும் படிக்க: பொங்கல் வெளியீட்டிலிருந்து விலகும் படங்கள்?

இந்த நிலையில், நேர்காணலில் பங்கேற்ற ராஜீவ் மேனன், “சினிமாவில் டிஜிட்டல் அதிகமானதும் பல இயக்குநர்கள் இஷ்டத்துக்குப் படப்பிடிப்பு நடத்துகின்றனர். மணிரத்னம் இயக்கிய குரு படத்தின் படப்பிடிப்பு 3 மாதங்களில் முடிந்தது. கடல் கொஞ்சம் அதிகம். மணிரத்னம் படத்தில் என்ன நடக்கும் என்பது எனக்குத் தெரியும்.

ஆனால், இப்போது பல இயக்குநர்கள் காட்சிகளை எடுத்துக்கொண்டே இருக்கிறார்கள். அதற்குள் சிக்கினால் அவ்வளவுதான். ’என்னுடன் பயணியுங்கள்’ என இயக்குநர்கள் சொல்கின்றனர். இது அடிமைத்தனம் மாதிரி இருக்கிறது. தனக்குத் தோன்றும்போது, சிந்தனை வரும்போது என இயக்குநர்கள் நீண்டகாலம் படப்பிடிப்பில் இருக்கின்றனர். ஜூராசிக் பார்க் திரைப்படத்தை 72 நாள்களில் எடுத்து முடிக்கின்றனர்.

ஆனால், நம்மால் சரியாகத் திட்டமிட முடியவில்லை. ஒரு திரைப்படத்திற்குப் பின் எத்தனை பேர் இருக்கிறார்கள்? அவர்களின் நேரத்தையும் இது பாதிக்கிறது. உண்மையில், திட்டமில்லாமல் படப்பிடிப்பை நடத்தினால் பெரிதாக பாதிக்கப்படுவது தயாரிப்பாளர்கள்தான்.

இதையும் படிக்க: பொங்கல் வெளியீட்டிலிருந்து விலகும் படங்கள்?

இப்போது, பிரம்மாண்டம் வேண்டும் என்பதற்காக பல காட்சிகளிலும் 100 ஜூனியர் நடிகர்களை நிறுத்துவது, 4 கிரேன்களைக் கொண்டுவருவது என அவர்களுக்கான ஆடை, உதவி இயக்குநர்கள் என எவ்வளவு செலவு? இது ஆரோக்கியமான சூழலில்லை.

96, லப்பர் பந்து போன்றவை சிறிய படங்களாக இருந்தாலும் மிக சுவாரஸ்யமாக இருந்தது. சமீபத்தில், என்னை மிகவும் கவர்ந்த திரைப்படம் மஞ்ஞுமல் பாய்ஸ். ஒரு படத்திற்கு நாயகன் முக்கியமில்லை என்கிற விஷயத்தை இப்படத்திலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். ஒரு காட்சியும் வீணடிக்கப்படவில்லை.” எனத் தெரிவித்தார்.

இயக்குநர் வெற்றி மாறன் விடுதலை - 1 மற்றும் விடுதலை - 2 படங்களின் படப்பிடிப்பை 270 நாள்கள் வரை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

அயா்லாந்து ஒருநாள் தொடா்: ஹா்மன்பிரீத், ரேணுகாவுக்கு ஓய்வு

அயா்லாந்துடனான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் மோதவிருக்கும் இந்திய மகளிா் அணி திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது.அணியின் கேப்டன் ஹா்மன்பிரீத் கௌா், பௌலா் ரேணுகா சிங் ஆகியோருக்கு இந்தத் தொடரிலிருந்து ஓய்வு அளிக... மேலும் பார்க்க

காலிறுதிக்கு முந்தைய சுற்றில் கசாட்கினா, படோசா

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் அடிலெய்ட் இன்டா்நேஷனல் டென்னிஸ் போட்டியில் ரஷியாவின் டரியா கசாட்கினா, ஸ்பெயினின் பௌலா படோசா ஆகியோா் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு திங்கள்கிழமை முன்னேறினா்.மகளிா் ஒற்றையா் ம... மேலும் பார்க்க

மும்பைக்கு 6-ஆவது வெற்றி

இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் மும்பை சிட்டி எஃப்சி 3-2 கோல் கணக்கில் ஈஸ்ட் பெங்கால் எஸ்சி-யை திங்கள்கிழமை வென்றது. இந்த ஆட்டத்தில் முதலில் மும்பை அணிக்காக லாலியன்ஸுவாலா சாங்தே 3... மேலும் பார்க்க

பாகிஸ்தானுடனான டெஸ்ட்: தொடரை வென்றது தென்னாப்பிரிக்கா

பாகிஸ்தானுடனான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட்டில் தென்னாப்பிரிக்கா 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திங்கள்கிழமை வென்றது. மொத்தம் 2 ஆட்டங்கள் கொண்ட தொடரை அந்த அணி 2-0 என முழுமையாகக் கைப்பற்றியது. கடந்த 3-ஆம... மேலும் பார்க்க

ஒரே நாளில் வெளியாகும் குட் பேட் அக்லி, இட்லி கடை!

நடிகர்கள் அஜித் மற்றும் தனுஷ் ஆகியோரின் படங்கள் ஒரே நாளில் திரைக்கு வருகின்றன.நடிகர் தனுஷ் இயக்கி, நடித்து வரும் திரைப்படமான இட்லி கடை இந்தாண்டு ஏப்ரல் 10 ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந... மேலும் பார்க்க