வேதாரண்யம் அருகே கரை ஒதுங்கிய ஆளில்லா மியான்மர் நாட்டுப் படகு!
நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே கடலில் மிதந்து புதன்கிழமை கரை ஒதுங்கிய ஆளில்லா மியான்மர் நாட்டு மூங்கில் படகு தொடர்பாக பாதுகாப்பு வட்டாரங்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வேட்டைக்காரனிருப்பு, வடக்கு சல்லிக்குளம் கடலோரத்தில் மியான்மர் நாட்டைச் சேர்ந்த மூங்கில் மரங்களால் செய்யப்பட்ட படகு ஒன்று கரை ஒதுங்கியது.
படகில், சமையல் செய்ய ஏதுவாக எரிக்கப்பட்ட மர விறகு துண்டுகளுடன் இரும்பு தகரத்தால் செய்யப்பட்ட அடுப்பு ஒன்றும் இருந்தது.
படகு அண்மைக்காலம் வரையில் பயன்படுத்தப்பட்டதற்கான அடையாளமாக பச்சை வண்ணத்தில் பாய் மரங்கள் காணப்படுகிறது.
தகவல் அறிந்து நிகழ்விடத்துக்குச் சென்ற பாதுகாப்பு வட்டாரங்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வேட்டைக்காரனிருப்பு கடற்கரையில் கரை ஒதுங்கியுள்ள மியான்மர் நாட்டு மூங்கில் படகு.