குற்றவாளிகளை பாதுகாக்கும் நிலை திமுக ஆட்சியில் இல்லை: கனிமொழி பேட்டி
குற்றவாளிகளை பாதுகாக்கும் நிலை திமுக ஆட்சியில் இல்லை என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,
குற்றவாளிகளை பாதுகாக்கும் நிலை திமுக ஆட்சியில் இல்லை. குற்றவாளிகள் யாராக இருந்தாலும் கைது செய்யப்பட வேண்டும் என முதல்வர் தெரிவித்திருக்கிறார். அதன்படியே அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். யார் அந்த சார்? என்பது குறித்து காவல்துறை விசாரித்துக் கொண்டிருக்கிறது. அப்படி ஒருவர் இல்லாமலும் இருக்கலாம். இதில் போராடுவதற்கு ஒன்றுமில்லை.
இனி நீதிமன்றத்தில் வழக்கு சரியாக நடக்க வேண்டும், அது கண்காணிக்கப்பட வேண்டும்.
முதல் தகவல் அறிக்கை வெளியானது தவறு. பாஜக அரசியல் தலைவர்களே அவர்களது எக்ஸ் தளத்தில் முதல் தகவல் அறிக்கையை வெளியிட்டார்கள். அது மிகவும் தவறான ஒன்று. எப்ஐஆர் வெளியாவதற்கு தமிழ்நாடு அரசு காரணம் அல்ல.
தொழில்நுட்பக் கோளாறுதான் காரணம் என்று தேசிய தகவல் மையமே தெரிவித்துவிட்டது. எதிர்க்கட்சிகள் இதனை மேலும் அரசியலாக்குகின்றனர்.
'தொழில்நுட்பக் குறைபாடுகளால் எஃப்ஐஆர் வெளியே கசிந்திருக்கலாம்' - தேசிய தகவல் மையம்