பேரவை உறுப்பினா்கள் மரியாதைக்குரிய வகையில் எதிா்ப்பை பதிவு செய்யவேண்டும்: உச்சநீ...
ஆப்கானின் மீதான பாகிஸ்தானின் தாக்குதலுக்கு இந்தியா கண்டனம்!
ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் நடத்தி வரும் வான்வழித் தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.
ஆயுதம் ஏந்திய பயங்கர வாதக் குழுக்களுக்கு தலிபான் அரசு அடைக்கலம் தருவதாகவும் அதனால் தீவிரவாதிகள் பதுங்கியிருக்கும் இடங்களை தகர்ப்பதாகவும் கூறி, ஆப்கானிஸ்தான் நாட்டின் மீது பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகின்றது. இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, இன்று (ஜன.6) இந்திய வெளியுறவுத் துறையின் செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது, ஆப்கானிஸ்தானின் மீதான பாகிஸ்தானின் இந்த வான்வெளி தாக்குதலில் பெண்கள் குழந்தைகள் உள்பட ஏராளமான பொதுமக்கள் கொல்லப்பட்டதைப் பற்றி ஊடகங்கள் வாயிலாக அறிந்துக் கொண்டதாக அவர் கூறினார்.
இதையும் படிக்க:கும்பமேளாவிற்கு வெடிகுண்டு மிரட்டல்! 17 வயது மாணவன் கைது!
இந்நிலையில், பொதுமக்களின் மீதான இந்த தாக்குதலுக்கு இந்தியா சந்தேகத்திற்கு இடமின்றி கண்டிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, உள்நாட்டில் ஏற்பட்ட தோல்விகளுக்கு பக்கத்து நாடுகளின் மீது குற்றம்சுமத்துவது என்பது பாகிஸ்தானுக்கு பழக்கமான ஒன்று தான் என்று ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியுள்ளார்.
இந்த தாக்குதல் தொடர்பாக ஆப்கானிஸ்தானின் செய்தித் தொடர்பாளரின் பதிலையும் இந்தியா தொடர்ந்து கவனித்து வருவதாக கூறப்பட்டுள்ளது.