செய்திகள் :

TN Assembly: ``அந்தப் பதவியில் ஏன் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும்?'' - ஆளுநருக்கு குறித்து முதல்வர்

post image

கடந்த ஆண்டைப் போலவே, இந்த ஆண்டின் முதல் சட்டமன்றக் கூட்டத்தொடர் ஆளுநர் சர்ச்சையுடனே தொடங்கியிருக்கிறது. இன்று காலை தொடங்கிய சட்டமன்ற கூட்டத்தொடரில், தமிழ்த்தாய் வாழ்த்துக்குப் பிறகு தேசிய கீதம் பாடப்படவில்லை என, ஆளுநர் ஆர்.என். ரவி சபையைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்தார்.

ஆளுநர் ரவி

ஆளுநரின் இந்தச் செயல் குறித்து, பல்வேறு அரசியல் கட்சியினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், ஆளுநரின் இத்தகைய செயலுக்கு முதல்வர் ஸ்டாலின் தற்போது எதிர்வினையாற்றியிருக்கிறார்.

TN Assembly - ஆளுநர் ரவி, முதல்வர் ஸ்டாலின்

எக்ஸ் தளத்தில் முதல்வர் ஸ்டாலின், ``அரசியல் சட்டப்படி, ஆண்டின் தொடக்கத்தில் அரசின் உரையை மாநில ஆளுநர் வாசிப்பது சட்டமன்ற ஜனநாயகத்தின் மரபு! அதை மீறுவதையே தனது வழக்கமாக வைத்துள்ளார் ஆளுநர். கடந்த ஆண்டுகளில் இருந்ததை வெட்டியும், இல்லாததை ஒட்டியும் வாசித்த ஆளுநர் இம்முறை வாசிக்காமலேயே போயிருப்பது சிறுபிள்ளைத்தனமானது. தமிழ்நாட்டு மக்களையும், அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசையும், நூற்றாண்டு கண்ட தமிழ்நாடு சட்டப்பேரவையையும் தொடர்ந்து அவமதிக்கும் ஆளுநரின் செயல் அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல. "தனது அரசியல் சட்டக் கடமைகளைச் செய்யவே மனமில்லாதவர் அந்தப் பதவியில் ஏன் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும்?" என்பதே அனைவர் மனதிலும் எழும் வினா!" என்று பதிவிட்டிருக்கிறார்.

VIKATAN PLAY - EXCLUSIVE AUDIO STORIES

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/MaperumSabaithanil

புற்றுநோய் பாதிப்புடன் 43 நாளாக தொடரும் உண்ணாவிரதம்; அசைக்க முடியாத உறுதி! - யார் அந்த விவசாயி?

``என் உயிரை விட விவசாயிகளோட வாழ்க்கை தான் முக்கியம்..." இப்படி அவர் கடந்த சனிக்கிழமை உரையாற்றும்போது அவர் உண்ணாவிரதம் தொடங்கி 41 நாள்கள் முடிந்திருந்தது.'விவசாயிகளின் நலனுக்காக இவ்வளவு வயதான முதியவர் ... மேலும் பார்க்க

Doctor Vikatan: பலரையும் பாதிக்கும் Brain Aneurysm... மூளை வீக்கத்தின் அறிகுறியாக மாறுமா தலைவலி?

Doctor Vikatan: சமீப காலமாக Brain Aneurysm குறித்த செய்திகளை அடிக்கடி கேள்விப்படுகிறோம். இதனால் பாதிக்கப்படுபவர்கள் தலைவலி, காய்ச்சல் அறிகுறியுடன்மருத்துவமனையில் சேருவதாகவும், மருத்துவப் பரிசோதனையில் ... மேலும் பார்க்க

Justin Trudeau:`இந்தியாவுடன் உரசல்... பொருளாதார சிக்கல்' - ஜஸ்டின் ட்ரூடோ ராஜினாமா பின்னணி என்ன?

கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, 2015-ம் ஆண்டு தன் லிபரல் கட்சியை ஆட்சிக்குக் கொண்டுவந்தார். அப்போது அவருக்கு வயது 43. அரசியலில் புதிய முகம், இளம் தலைவர், வெளிப்படையான குடியேற்றக் கொள்கையை மையமாகக் கொண்ட ப... மேலும் பார்க்க

Kerala: `வனத்துறை அலுவலகம் மீது தாக்குதல்' -எம்.எல்.ஏ கைது; போலீஸை விமர்சித்த கோர்ட்.. என்ன நடந்தது?

பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத எம்.எல்.ஏகேரள மாநிலத்தில் ஆளும் சி.பி.எம் ஆதரவுடன் வெற்றிபெற்று மலப்புறம் மாவட்டம் நிலம்பூர் சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ-வாக இருப்பவர் பி.வி.அன்வர். இவர் காங்கிரஸ் பாரம்பர்ய கு... மேலும் பார்க்க

Justin Trudeau: பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ட்ரூடோ... அடுத்த கனடா பிரதமர் யார்?!

2015-ம் ஆண்டு லிபரல் கட்சி சார்பாக கனடா பிரதமராக பதவியேற்ற ஜஸ்டின் ட்ரூடோ 2021-ம் ஆண்டு நடந்த தேர்தலிலும் வெற்றி பெற்று அதே பதவியில் தொடர்ந்தார்.ஆனால், 2015-ம் ஆண்டு இருந்த அதே நற்பெயர் அவருக்கு 2021-... மேலும் பார்க்க

தமிழகத்தில் இருவருக்கு HMPV தொற்று உறுதி... எப்படிப் பரவும், என்ன செய்ய வேண்டும்?

பரவும் HMPV தொற்று!ஆண்டுகள் கடந்தாலும் கொரோனா பேரிடர் ஏற்படுத்திச் சென்ற தாக்கத்திலிருந்து இன்னும் மக்கள் முழுவதுமாக மீளவே இல்லை. இந்நிலையில், மீண்டும் சீனாவில் ஹியூமன் மெட்டாநியூமோ வைரஸ் எனப்படும் HM... மேலும் பார்க்க