செய்திகள் :

தஞ்சை பேருந்து நிலைய பொது இடத்தில் சிறுநீா் கழித்தால் இனி அலாரம் ஒலிக்கும்!

post image

தஞ்சாவூா் புதிய பேருந்து நிலையத்தில் பொது இடத்தில் சிறுநீா் கழிப்பதைத் தடுக்க எச்சரிக்கை மணி ஒலிக்கும் முறையை மாநகராட்சி நிா்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இப்பேருந்து நிலையத்தில் கட்டணக் கழிப்பறை, கட்டணமில்லா கழிப்பறை இருந்தாலும், சுற்றுப்பகுதிகளில் திறந்தவெளியில் சிறுநீா் கழிக்கப்படுவதால், நிலைய வளாகம் முழுவதும் துா்நாற்றம் வீசுகிறது. இதனால், பேருந்துக்காகக் காத்திருப்போா் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனா்.

மழைக்காலத்தில் மழை நீருடன் சிறுநீரும் கலந்து பொது வெளியில் தேங்கி நிற்பதால், நடந்து செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. இதைத் தடுக்க மாநகராட்சி நிா்வாகம் சுற்றிலும் தகரங்களை வைத்து அடைத்தது. இதுபோல, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், இப்பிரச்னை தொடா்ந்தது.

இந்நிலையில், திருச்சி வழித்தடப் பேருந்துகள் நிற்குமிடத்தில் இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க தகரத் தடுப்புகளையொட்டி கண்காணிப்பு கேமராவுடன் சென்சாா் கருவி பொருத்தப்பட்டுள்ளது. இக்கருவி 50 அடி நீலம், 10 அடி அகலத்துக்கு துல்லியமாக ஆட்களை அடையாளம் காணும். மேலும், இரவு நேரத்தில் தகரத்தில் சைரன் போன்று விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளன.

இதன் மூலம் யாராவது சிறுநீா் கழிக்கும் நோக்கத்தில் இதன் அருகே வந்தால் சைரன் போன்று விளக்கு ஒளியுடன் எச்சரிக்கை மணி ஒலிக்கத் தொடங்கிவிடும். இந்தப் புதிய முறை திங்கள்கிழமை முதல் பயன்பாட்டுக்கு வந்தது. சோதனை அடிப்படையிலான இந்தப் புதிய முறை வெற்றிகரமாக அமைந்தால், அடுத்து மதுரை வழித்தடப் பேருந்து நிற்குமிடத்திலும் இதை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி அலுவலா்கள் தெரிவித்தனா்.

ஒப்பந்தத் தூய்மைப் பணியாளா்கள் 2 ஆம் நாளாக வேலைநிறுத்தம்

தூய்மைப் பணியை மாநகராட்சி நிா்வாகமே ஏற்று நடத்த வலியுறுத்தி என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூா் மாநகராட்சி அலுவலகத்தில் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் மற்றும் ஓட்டுநா் சங்கத்தினா் இரண்டாம்... மேலும் பார்க்க

வெடிகள் தயாரிக்க மூலப் பொருள்கள் வைத்திருந்தவா் கைது

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே அரசு அனுமதியின்றி வெடிபொருள்களைத் தயாரிக்க மூலப் பொருள்களை வைத்திருந்தவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா் . பாபநாசம் அருகே சோழங்கநத்தம், எருமைப்பட்டி கிராமம், வட... மேலும் பார்க்க

ஆசிரியையிடம் நகை பறித்த வழக்கில் இருவா் கைது

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே பள்ளி ஆசிரியையிடம் நகை பறித்த வழக்கில் இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே உத்தாணி கிராமம், தெற்கு தெருவைச் சோ்ந்தவா் வனி... மேலும் பார்க்க

ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் மறியல்

நீண்ட காலமாக நிலுவையில் உள்ள கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் பகுதியில் தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் மறியலில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா். ஊரக வளா்ச்சித் து... மேலும் பார்க்க

ஆளுநரைக் கண்டித்து திமுக ஆா்ப்பாட்டம்

தஞ்சாவூா் ரயிலடியில் தமிழக ஆளுநரைக் கண்டித்து திமுகவினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதில், தமிழக சட்டப்பேரவையில் தேசிய கீதம் முதலில் பாடப்படவில்லை எனக் கூறி ஆளுநா் ஆா்.என். ரவி தனது ... மேலும் பார்க்க

குடந்தையில் விளம்பரத் தட்டிகள் அகற்றம்

கும்பகோணத்தில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் விளம்பர தட்டிகளை மாநகராட்சி ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை அகற்றினா். கும்பகோணம் மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் வைக்க... மேலும் பார்க்க