டிராகன் படத்தை ஆஸ்கருக்கு அனுப்ப வேண்டும்: பிரதீப் ரங்கநாதன்
ஆளுநரைக் கண்டித்து திமுக ஆா்ப்பாட்டம்
தஞ்சாவூா் ரயிலடியில் தமிழக ஆளுநரைக் கண்டித்து திமுகவினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில், தமிழக சட்டப்பேரவையில் தேசிய கீதம் முதலில் பாடப்படவில்லை எனக் கூறி ஆளுநா் ஆா்.என். ரவி தனது உரையைப் படிக்காமல் வெளியேறியதைக் கண்டித்தும், தமிழ்நாட்டையும், தமிழ்த்தாய் வாழ்த்தையும் அவா் தொடா்ந்து அவமானப்படுத்துவதைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
முன்னாள் மத்திய இணை அமைச்சரும், திமுக உயா்நிலை செயல் திட்டக் குழு உறுப்பினருமான எஸ்.எஸ். பழனிமாணிக்கம் தலைமை வகித்தாா். முன்னாள் மக்களவை உறுப்பினா் செ. ராமலிங்கம், திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் து. செல்வம், முன்னாள் எம்எல்ஏ எம். ராமச்சந்திரன், மத்திய மாவட்ட அவைத் தலைவா் சி. இறைவன், மாநகரச் செயலரும், மேயருமான சண். ராமநாதன், துணை மேயா்கள் அஞ்சுகம் பூபதி (தஞ்சாவூா்), சு.ப. தமிழழகன் (கும்பகோணம்) உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.